- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்த 5 இந்திய இந்திய வீரர்கள் அணியும் கைக்கடிகாரம் எத்தனை கோடிகள், லட்சங்கள் தெரியுமா..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான மோகம் என்று குறைந்ததே இல்லை. அதே போல அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பற்றி அறிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் காட்டி வருவர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் கை கடிகாரத்தின் விலை மற்றும் பிராண்ட் என்ன என்பதை பற்றி காணலாம்.

விராட் கோலி

- Advertisement -

தற்போதய இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, பிரபல சர்வதேச நிறுவனமான ‘பூமா’ என்ற நிறுவனத்துடன் 300 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இவர் பயன்படுத்தும் கை கடிகாரம் இத்தாலி நாட்டு ‘Panerai’ நிறுவனத்துடையது அதனுடைய பெயர் Luminor 1950 GMT 3 Days Automatic Acciaio. இதன் விலை சுமார் 6,29,000 ஆகும்.

உமேஷ் யாதவ்

- Advertisement -

இந்திய அணியின் வேகபந்து வீச்சாளரான இவர் , ஸ்விட்சர்லாந்து நாட்டின் ‘Graham Silverstone’ என்ற கை கடிகார நிறுவனத்தின், Stowe GMT எனும் கை கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதுனுடைய விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 6,73,000 ஆகும்.

யுவராஜ் சிங்

- Advertisement -

இந்திய அதிரடி வீரரான யுவராஜ் சிங், கார் மீது அதிகம் மோகம் கொண்டவர். அதே போல கை கடிகாரத்தின் மீதும் இவருக்கு ஆர்வம் அதிகம். இவர் Ulysse Nardin என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டின் நிறுவனத்தின் தயரிப்பான Executive Dual Time Limited Edition என்ற கை கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதன் விலை 9,77,293 ரூபாய் ஆகும்

மஹேந்திர சிங் தோனி

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி, Audemars Piguet என்ற நிறுவனத்தின் Royal Oak Offshore Bumble Bee என்ற லிமிடெட் எடிஷன் கை கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதன் விலை 26,78,00 ரூபாய ஆகும்

சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினும், தோனி பயன்படுத்தி வரும் Audemars Piguet என்ற நிறுவன தயாரிப்பின் கை கடிகாரத்தை தான் பயன்படுத்தி வருகிறார். சச்சின் இந்த நிறுவன கை கடிகாரத்தின் ரசிகர் என்பதால் Audemars Piguet, சச்சினுக்கு பிரத்யேகமாக AP Royal Oak Offshore piece என்ற கை கடிகாரத்தை அளித்துள்ளது. இதன் விலை 1.3 கோடி ரூபாய் ஆகும்.

- Advertisement -