- Advertisement -
ஐ.பி.எல்

ஹைதெராபாத்டை மிஞ்சிய முரட்டு அடி.. சிக்ஸர் மழையால் பஞ்சாப் – கொல்கத்தா போட்டி புதிய உலக சாதனை

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் 2024 டி20 தொடர் விருந்து படைத்து வருகிறது. அதில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற 42வது லீக் போட்டி உச்சகட்ட விருந்து படைத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சிறப்பாக விளையாடி 20 ஓவரில் 262 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக பில் சால்ட் 75, சுனில் 71 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் “நீங்கள் மட்டும் தான் அடிப்பீர்களா அதே பிட்ச்சில் நாங்களும் அடித்து நொறுக்குவோம்” என்ற வகையில் பேட்டிங் செய்து பவரை காட்டியது. அதாவது அந்த அணிக்கு துவக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 (20) ரன்கள் குவித்து துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

சிக்ஸர் மழை:
அதே போல மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ இந்த சீசனில் முதல் முறையாக முரட்டுத்தனமாக அடித்து 8 பவுண்டரி 9 சிக்ஸருடன் 108* (48) ரன்கள் விளாசி சதமடித்தார். அதை வீணடிக்காமல் ரிலீ ரோசவ் 26 (16), சசாங் சிங் 68* (28) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டிப்பிடித்து பஞ்சாப் வென்றது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது.

அத்துடன் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய உலக சாதனையையும் படைத்தது. அதை விட இப்போட்டியில் பிரப்சிம்ரன் சிங் 5, பேர்ஸ்டோ 9, ரிலீ ரோசவ் 2, சசாங் சிங் 8 என பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 24 சிக்ஸர்களை பறக்க விட்டார்கள். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் இதே வருடம் பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய 2 அணிகளுக்கு எதிராக ஹைதராபாத் அணி தலா 22 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இப்போட்டியில் ஹைதராபாத் அணியை மிஞ்சி இப்போட்டியில் கொல்கத்தாவை முரட்டுத்தனமாக பஞ்சாப் அடித்தது என்றே சொல்லலாம். அதே போல இந்த போட்டியில் கொல்கத்தா அணி தங்களுடைய பங்கிற்கு 18 சிக்சர்கள் அடித்தது.

இதையும் படிங்க: யாராச்சும் எங்கள காப்பாத்துங்க ப்ளீஸ்.. பஞ்சாப் அடியை பார்த்து மிரண்டு போன அஸ்வின்.. பரிதாப கோரிக்கை

அந்த வகையில் மொத்தமாக இப்போட்டியில் 2 அணிகளும் (24+18) சேர்ந்து 42 சிக்ஸர்கள் அடித்தன. இதன் வாயிலாக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையையும் பஞ்சாப் – கொல்கத்தா போட்டி படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. 42 : பஞ்சாப் – கொல்கத்தா, கொல்கத்தா, ஐபிஎல் 2024
2. 38 : ஹைதெராபாத் – மும்பை, ஹைதெராபாத், ஐபிஎல் 2024
3. 38 : ஹைதெராபாத் – பெங்களூரு, பெங்களூரு, ஐபிஎல் 2024
4. 37 : பால்க் லெஜெண்ட்ஸ் – காபூல் ஜவான், ஷார்ஜா, ஏபிஎல் 2018/19

- Advertisement -