- Advertisement -
ஐ.பி.எல்

4 பேட்ஸ்மேன்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் காட்டடி.. பஞ்சாப் – கொல்கத்தா போட்டியில் நிகழ்ந்த 17 வருட அரிதான உலக சாதனை

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 262 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 75 சுனில் நரேன் 71 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதை சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 54 (20), ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 108* (48) ரன்களை விளாசி அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் ரிலீ ரோசவ் 26 (16) ரன்கள் எடுத்த நிலையில் சசாங் சிங் 68* (28) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் செய்தார். அதனால் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த பஞ்சாப் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அரிதான நிகழ்வு:
அதனால் தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட பஞ்சாப் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது. முன்னதாக இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 75 ரன்களும் சுனில் நரேன் 71 ரன்களும் எடுத்தார்கள்.

அதே போல பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் ப்ரப்சிம்ரன் சிங் 54 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 108* ரன்களும் அடித்தனர். அதாவது 2 அணிகளின் துவக்க வீரர்களும் சொல்லி வைத்தார் போல் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தனர். இப்படி ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் இரு அணிகளின் 4 துவக்க வீரர்களும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளின் 4 துவக்க வீரர்களும் 50+ ரன்களை பதிவு செய்த அரிதான நிகழ்வு இப்போட்டியில் அரங்கேறியுள்ளது.

- Advertisement -

அதே போல இப்போட்டியில் பில் சால்ட் 202.70, சுனில் நரேன் 221.88 ஸ்ட்ரைக் ரேட்டில் முறையே 75, 71 ரன்கள் அடித்தார்கள். மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் 270.00, ஜானி பேர்ஸ்டோ 225.00 ஸ்ட்ரைக் ரேட்டில் முறையே 54, 108* ரன்கள் அடித்தார்கள். ஒரு டி20 போட்டியில் இப்படி இரு அணிகளின் 4 துவக்க வீரர்களும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 50+ ரன்கள் அடிப்பதும் இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: ஹைதெராபாத்டை மிஞ்சிய முரட்டு அடி.. சிக்ஸர் மழையால் பஞ்சாப் – கொல்கத்தா போட்டி புதிய உலக சாதனை

இதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இரு அணிகளின் 4 துவக்க வீரர்களும் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த போட்டியாக நேற்றைய பஞ்சாப் – கொல்கத்தா ஆட்டம் அரிதான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு போட்டியில் 4 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -