- Advertisement -
ஐ.பி.எல்

உண்மையா அவரோட ஓவர் தான் டர்னிங் பாய்ண்ட்.. கடைசி ஓவரில் இதான் என்னோட திட்டம்.. முகேஷ் பேட்டி

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபிஷேக் போரேல் 65, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 50, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 4, ஜோஸ் பட்லர் 19, ரியான் பராக் 27, சுபம் துபே 25, ரோவ்மன் போவல் 13, டோனவன் பெரிரா 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார்கள். அதனால் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 86 (46) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ராஜஸ்தான் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

டர்னிங் பாயிண்ட்:
அதனால் போராடி வெற்றி கண்ட டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்நிலையில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டதால் எப்படியாது வெறும் 2 டாட் பந்துகளை வீசினால் வெற்றி பெற முடியும் என்று நம்பியதாக டெல்லி வீரர் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அந்த தன்னம்பிக்கையுடன் ரோவ்மன் போவலை அவுட்டாக்கியதாக தெரிவிக்கும் அவர் 18வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் டெல்லியின் வெற்றிக்கான திருப்பு முனையாக அமைந்ததாக பாராட்டியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி ஓவரில் 2 டாட் பந்துகளை மட்டுமே நான் வீச விரும்பினேன்”

- Advertisement -

“அதன் பின் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பந்து வீசினேன். ரோவ்மன் போவலை அவுட்டாக்க விரும்பினேன். என்னுடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து நான் ஆதரவு கொடுத்தேன். அதே சமயம் பிட்ச்க்கு தகுந்தார் போல் பந்து வீசிய நான் என்னுடைய வேரியசன்களை பயன்படுத்தினேன். குல்தீப் யாதவ் 18வது ஓவர் தான் போட்டியின் டர்னிங் பாயிண்டாக அமைந்தது. 200 – 210 ரன்கள் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோராகும்”

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவிலேயே அவரோட வீக்னெஸை பாத்துட்டேன்.. ராஜஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் குல்தீப் பேட்டி

“இருப்பினும் நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றதால் அதையும் தாண்டி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்களை எடுத்தோம்” என்று கூறினார். அந்த வகையில் போராடி தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. தற்சமயத்தில் பிளே ஆஃப் செல்வதற்கு அந்த அணியும் தங்களுடைய அடுத்தகட்ட போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -