- Advertisement -
ஐ.பி.எல்

தென் ஆப்பிரிக்காவிலேயே அவரோட வீக்னெஸை பாத்துட்டேன்.. ராஜஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் குல்தீப் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஏழாம் தேதி நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 221/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர்-மெக்குர்க் 50, அபிஷேக் போரல் 65, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 222 ரன்களை சேசிங் ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 4, ஜோஸ் பட்லர் 19, ரியான் பராக் 27, சுபம் துபே 25, ரோவ்மன் போவல் 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். அதனால் மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 86 (46) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ராஜஸ்தான் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் குல்தீப்:
டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட டெல்லியின் வெற்றிக்கு 4 ஓவரில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக சஞ்சு சாம்சன், சுபம் துபே அவுட்டானதும் வந்த தென்னாபிரிக்க வீரர் டோனவன் ஃபெரீராவை 1 ரன்னில் அவர் தனது முதல் பந்திலேயே அவுட்டாக்கியது வெற்றியை ராஜஸ்தானிடம் இருந்து டெல்லியின் பக்கம் கொண்டு வந்தது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் இதற்கு முன் அவரை கொண்ட அனுபவத்தை வைத்து இப்போட்டியில் அவுட்டாக்கியதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சரியான லென்த்தில் பந்து வீசுவது மிகவும் முக்கியமாகும். டெத் ஓவர்களில் பவுலிங் செய்யும் போது அதுவே முதன்மையான சவாலாகும்”

- Advertisement -

“தென்னாபிரிக்காவில் அவருக்கு (பெரீரா) எதிராக நான் விளையாடியுள்ளேன். எனவே அவர் பின்னங்காலில் அடிக்கக்கூடிய வீரர் என்பதை நான் அறிவேன். அதனால் ஃபுல்லாகவும் வேகமாகவும் பந்து வீசி அவரை முதல் பந்தில் அவுட்டாக்கினேன். பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை எப்படி படிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் சில பந்துகளை வேகமாக வீசுவேன்”

இதையும் படிங்க: முதல் இந்திய பந்துவீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய – யுஸ்வேந்திர சாஹல்

“அந்த வகையில் லென்த் தான் மிகவும் முக்கியம். அது தான் என்னுடைய திட்டமாகும். 200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும். அதே சமயம் அது போன்ற போட்டிகளில் பவுலர்கள் விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே தொடர்ந்து நம்பிக்கை வைத்து என்னுடைய பலத்திற்கு நான் ஆதரவு கொடுக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -