- Advertisement -
ஐ.பி.எல்

யாராச்சும் எங்கள காப்பாத்துங்க ப்ளீஸ்.. பஞ்சாப் அடியை பார்த்து மிரண்டு போன அஸ்வின்.. பரிதாப கோரிக்கை

ஐபிஎல் 2024 டி20 தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக விளையாடி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 71, பில் சால்ட் 75 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு சுமாராக பந்து வீச்சை கொல்கத்தா பவுலர்களை அடித்து நொறுக்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பிரப்சிம்ரன் சிங் 54 (20), ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 108* (48) ரன்கள் விளாசினர். அவர்களுடன் ரிலீ ரோசவ் 26, சசாங் சிங் 68* (28) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 262/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் எளிதாக வென்றது.

- Advertisement -

எங்கள காப்பாத்துங்க:
அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது. இதற்கு முன் 2020ஆம் ஆண்டு சார்ஜாவில் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது.

இதற்கு முன் 2023ஆம் ஆண்டு சென்சூரியனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 259/4 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததை முந்தைய சாதனையாகும். அதனால் 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 261 ரன்கள் அடித்தும் பந்து வீச்சில் படுமோசமாக செயல்பட்ட கொல்கத்தா அணி சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் 262 ரன்களை அசால்டாக சேசிங் செய்துள்ள பஞ்சாப் அணியை பார்த்து மிரண்டு போயுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே இந்த வருடம் ஹைதராபாத் அணி 287 ரன்கள் அடித்ததை போல பெரும்பாலான போட்டிகளில் அனைத்து அணிகளும் எளிதாக 200 – 250 ரன்கள் அடித்து வருகின்றன. எனவே இப்படியே போனால் பவுலர்கள் அழிந்து விடுவார்கள் என்ற வகையில் தெரிவிக்கும் அஸ்வின் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: எங்க தப்பு நடந்துச்சுனே தெரியல.. 261 ரன் அடிச்சும் தோல்வியை சந்தித்தது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது என்ன?

“யாராவது பவுலர்களை காப்பாற்றுங்கள் ப்ளீஸ். 260+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பந்துகளுக்கு சமமான ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இது மூழ்கட்டும்” என்று கூறியுள்ளார். அவருக்கு மற்றொரு இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் “எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது” என்ற வகையில் பதிலளித்துள்ளார். இது போக வாசிம் அக்ரம், சுனில் கவாஸ்கர் போன்ற சில முன்னாள் வீரர்களும் அதிகப்படியான அதிரடிக்கு சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -