இந்திய அணியில் ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடி காணாமல் போன 5 ஆல்ரவுண்டர்கள் – லிஸ்ட் இதோ

JP-1

தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருக்கிறது. அதுவும் குறிப்பாக நீண்ட நாள் ஆடுமளவிற்கு ஆல் ரவுண்டர்கள் பெரிதாக இல்லை. கபில்தேவிற்கு பிறகு அணியில் இடம் கிடைத்தும் ஜொலிக்க முடியாமல் போன ஆல்ரவுண்டரகள் பட்டியலைப் பார்ப்போம்.

JP

ஜே பி யாதவ் :

இவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக 2002ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். கடைசியாக 2005 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி இருந்தார். உள்ளூர் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களும் 296 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த இதனால் இந்திய அணியில் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை.

Joginder 1

ஜொகிந்தர் சர்மா :

- Advertisement -

2007 டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் பட்டையை கிளப்பி கோப்பையை வென்று கொடுத்தவர். 15 வருடம் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடினாலும், இவரால் இந்திய அணிக்காக ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருக்க முடியவில்லை.

Sodhi

ரீதிந்தர் சிங் சோதி

இவர் கங்குலியின் தலைமையில் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான வேகப் பந்து வீச்சாளர் ஆவார். 18 முறை இந்திய அணிக்காக ஆடி 280 ரன்களும் 5 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளார்.

Sukla

லக்ஷ்மி ரத்தன் சுக்லா :

சமீபத்தில் ஓய்வு பெற்ற மேற்கு வங்க வீரராவார். 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 3 போட்டிகளில் பங்கேற்று விளையாடி பிறகு பல ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் ஆடினார். கடைசியாக 2012 ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார்.

Sanjay-Bangar

சஞ்சய் பாங்கர் :

தற்போது இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பவர். 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 12 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி இவரால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை.