150 கிலோமீட்டர் வேகத்திற்கு பந்துவீசக்கூடிய 5 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பேட்ஸ்மேன்கள் மட்டுமே பெரிதாக உருவாகி வந்தனர். இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் பல சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள் உருவாகி விட்டனர். முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் என பல திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி விட்டனர். இவர்கள் அனைவருமே தற்காலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக இருப்பவர்கள். அவர்கள் அனைவரும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீச கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bumrah

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா :

குஜராத்தை சேர்ந்த இவர். 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். தற்போது உள்ள உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில், இவரும் ஒருவர். இந்திய அணியின் பந்து வீச்சிற்கு தலைவர் என்று கூட கூறலாம். டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் என அனைத்துவிதமான போட்டிகளையும் சரி சமபலத்துடன் பந்துவீச கூடிய வல்லமை படைத்தவர்.

Umesh-Yadav

உமேஷ் யாதவ் :

- Advertisement -

பரோடாவில் சேர்ந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் அணியிலும் விராட் கோலியின் அணியிலும் இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக பெரும்பாலும் விளையாடியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பை கொண்டவர். இதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இவரால் பந்து வீச முடியும்.

prasidh-krishna

பிரசித் கிருஷ்ணா :

- Advertisement -

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக ஆடி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமானார். யாரும் எதிர்பாராத வகையில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு அற்புதமாக பந்துவீசினார். அதே தொடரில் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பேசி அசத்தினார். இவரும் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

Ishanth

இஷாந்த் ஷர்மா :

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் மிக அதிக அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் இவர்தான் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் இவர் ஒரு ஓவரில் ஒரு பந்தையாவது 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் வல்லமை படைத்தவர்.

Shami

முகமது ஷமி :

தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் ஒரு பந்து வீச்சாளர் 2013ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார். இவரால் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் எப்போதும் பந்துவீச முடியும்.

Advertisement