ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலாக போட்டி நடைபெற்று வருகிறது. இவர்களின் இந்த போட்டியை பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும். இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் பலர் தங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் திறமையால் பல சாதனைகளை படைத்து இருக்கின்றனர். இதில் ஒரு சில இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை டக்-அவுட் ஆகியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்படி அதிகமுறை டக் அவுட்டான 5 இந்திய வீரர்கள் பற்றி காண்போம்.
ஹர்பஜன் சிங் :
இவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். இவன் தனது பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 341 ரன்கள் அடித்துள்ளார். இருப்பினும் ஹர்பஜன்சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.
பக்வாத் சந்திரசேகர் :
இவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். 1964ம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இவர் 58 டெஸ்ட் தொடரில் பங்கேற்று 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவர் 16முறை 5 விக்கெட்டும் 2 முறை 10 விக்கெட்டும் எடுத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 6 முறை டக்-அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகிர் கான் :
இவர் இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்துவீச்சாளர். இவர் இந்திய அணியின் பந்து வீச்சில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் செய்யவில்லை. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 7 முறைடக்-அவுட் ஆகியுள்ளார்.
அஜித் அகார்கர் :
இவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவருக்கு “பாம்பே வாத்து” என்ற அடைமொழி இருக்கிறது. இவர் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 60 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் 9 போட்டிகளில் விளையாடி 8 முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.
இசாந்த் சர்மா :
இவர் இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் இல்லை. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 போட்டிகளில் விளையாடி 12 முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.