இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 5 தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

TN
- Advertisement -

இந்திய அணியில் இதுவரை ஏராளமான தமிழக வீரர்கள் விளையாடியுள்ளனர். அப்படி தமிழகத்தில் தமிழகத்தில் இருந்து வந்து இந்திய சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 5 தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். டி.ஏ. சேகர் (சென்னை) – 1982 டி.ஏ. சேகர், சர்வதேச ஒருநாள் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் ஆவார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவருக்கு தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி உள்ளார். இதன்பிறகு 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் விளையாடி உள்ளார். மொத்தம் 4 ஒரு நாள் தொடரில் விளையாடி இவர் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

sekar 1

- Advertisement -

பாரத் அருண் – தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான இவர் 1986 1986ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச இந்திய அணியில் இடம் பெற்றார். பாரத் அருண் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய மற்றொரு தமிழக வேகப்பந்து வீச்சாளர். 1986-87ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharath Arun

டி குமரன் – 1999 குமரன், தமிழ்நாட்டில் உள்ள சென்னையை சேர்ந்தவர். இவர் 1999 ஆம் ஆண்டு இரானியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். இவர் இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

kumaran

Balaji 1

எல் பாலாஜி – 2003 பாலாஜி, தமிழகத்திலுள்ள கோவை மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமாகிறார். 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 34 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Nattu

டி நடராஜன் – 2020 கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற இவர் இந்திய அணிக்காக முதலில் ஒருநாள் தொடரில் நான் அறிமுகமாகிறார். தனது முதல் ஒருநாள் தொடரிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதற்கடுத்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement