ஐபிஎல் மெகா ஏலம் 2022 : முதல் நாளில் அதிக விலைக்கு போன டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ex
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் இந்த வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் முதல் நாளில் 161 வீரர்களின் பெயர்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டன. அதில் முதலாவதாக ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், டேவிட் வார்னர், குவின்டன் டி காக் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

Auction

- Advertisement -

டாப் 5 வீரர்கள்:
நேற்றைய ஏலம் துவங்கியது முதலே நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வாங்க சென்னை போன்ற ஒருசில அணிகளை தவிர ஏனைய அனைத்து அணிகளும் கடும் போட்டி போட்டன. குறிப்பாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தங்களுக்கு தேவையான மொத்த அணியையும் உருவாக்க வேண்டும் என்பதால் நட்சத்திர வீரர்களை யோசிக்காமல் வாங்க துவங்கியது. சரி ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் முதல் நாளில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப்-5 வீரர்கள் பற்றி பார்ப்போம்.

1. இஷான் கிசான் (15.25 கோடிகள்) : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் கடந்த சில வருடங்களாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரராக செயல்பட்டு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்தியா மற்றும் ஐபிஎல் என கிடைத்த அனைத்து வாய்ப்புகளும் அபாரமாக செயல்பட்ட இவர் இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் பிரிவில் பங்கேற்றார். இவரை மீண்டும் வாங்குவதற்காக கடும் போட்டி போட்ட மும்பைக்கு பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் சவால் கொடுத்தன.

ishan
ishan MI

இடையில் குஜராத் அணியும் உள்ளே புகுந்ததால் இவரின் விலை 10 கோடியை தொட அதன்பின் ஹைதராபாத் அணி உள்ளே நுழைய இவரின் விலை 12 கோடிகளை தாண்டியது. ஆனாலும் பிடித்த பிடிவாதமாய் கடைசிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் ஒரு வழியாக 15.25 என்ற மிகப்பெரிய தொகைக்கு இஷாந்த் கிஷானை ஒப்பந்தம் செய்தது. இதன் வாயிலாக ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2வது இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங்க்கு (16 கோடிகள்) பின் பெற்றுள்ளார்.

- Advertisement -

2. தீபக் சஹர் (14 கோடிகள்): சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர், சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் போன்ற சரித்திர சாதனைகளை படைத்துள்ள தீபக் சஹர் கடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். சமீப காலங்களாக லோயர் ஆர்டரில் பேட்டிங்கிலும் பட்டைய கிளப்பி வரும் இவரை வாங்க சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் கடுமையாக போட்டி போட்டன.

deepak 1

இடையில் ராஜஸ்தான் அணியும் உள்ளே புகுந்ததால் அவரின் விலை 10 கோடிகளை தாண்டிய போதும் கடைசி வரை நின்று விலை கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதியில் அவரை 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை தீபக் சாஹர் படைத்துள்ளார்.

- Advertisement -

3. ஷ்ரேயஸ் ஐயர் (12.25 கோடிகள்):
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்படுவார் என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டார். ஏனென்றால் மிடில் ஆர்டரில் அபாரமாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ள இவர் ஏற்கனவே கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் கொண்டுள்ளார்.

iyer 1

எனவே தங்கள் அணிக்கு கேப்டன் இல்லாத பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் இவரை வாங்க கடுமையாக போட்டியிட்டன. இறுதியில் 12.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வெற்றிகரமாக வாங்கியது. இதன் காரணமாக விரைவில் அந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

4. ஷார்துல் தாகூர் (10.75 கோடிகள்): சமீப காலங்களாக சிறந்த ஆல்-ரவுண்டராக அவதாரம் எடுத்துள்ள ஷர்துல் தாகூர் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். கடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர் சமீப காலங்களாக இந்திய டெஸ்ட் அணியில் பட்டைய கிளப்பி வருவதால் இவரை “லார்ட் ஷார்துல் தாகூர்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இப்படி ரசிகர்களின் ஹீரோவாக உருவெடுத்துள்ள இவரை வாங்க சென்னை உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டியிட்ட நிலையில் 10.75 கோடிகளுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணிக்கு விளையாட வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்துள்ளது.

harshal 1

5. ஹர்ஷல் படேல் (10.75 கோடிகள்) : கடந்த வருடம் பெங்களூர் அணிக்காக வெறும் 20 லட்சத்துக்கு விளையாடிய ஹர்ஷல் பட்டேல் 32 விக்கெட்களை எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற டுவைன் பிராவோவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த இவரின் மவுசு பல மடங்கு உயர்ந்த போதிலும் அவரை பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைக்க வில்லை.

அந்த வேளையில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் பிரிவின் கீழ் இந்த ஏலத்தில் களமிறங்கிய இவரை வாங்க பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் கடுமையாக போட்டி போட்டன. எத்தனை அணிகள் குறுக்கே வந்தாலும் கடைசி வரை நின்ற பெங்களூரு இவரை 10.75 என்ற மிகப்பெரிய தொகைக்கு மீண்டும் விளையாட தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளதால் பெங்களூரு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Advertisement