இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில் அதிகத்தொகைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரில் ஒரு சில வீரர்களை எடுக்க அணிகள் ஏலத்தில் போட்டா போட்டியாக போட்டுக்கொண்டிருக்கும். ஒரு சில வீரர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று தெரிந்து விட்டால் அவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து எடுக்க கூட அணிகள் தயங்காது. இப்படி 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

Coulternile

நேதன் கூல்டர் நைல் – 8 கோடி :

இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையான ஏலத்திற்கு பின்னர் 8 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது.

Cottrell

செல்டன் காட்ரெல் – 8.5 கோடி :

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை சென்ற ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.5 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது.

morris

கிரிஸ் மோரிஸ் – 10 கோடி :

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஆன இவரை சென்ற முறை ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடுமையான போட்டிக்கு பின்னர் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறது.

maxwell

கிளன் மேக்ஸ்வெல் – 10.75 கோடி :

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் இவர் ஏற்கனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி இருக்கிறார். இருந்தாலும் அவரை இந்த முறை வெளியே விட்டு மீண்டும் அதிக தொகை கொடுத்து 10.75 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

Cummins

பேட் கம்மின்ஸ் – 15.5 கோடி :

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவரை கொல்கத்தா அணி 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர் இவர்தான்.