ஐ.பி.எல் வரலாற்றில் 20 ஆவது ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 5 மோசமான பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Dinda-3
- Advertisement -

டி20 போட்டியில் பந்து வீசுவது மிகவும் சிரமமான விஷயம். அதுவும் இந்த காலத்தில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற விதிமுறைகள் வந்துவிட்டது. ஐபிஎல் தொடரிலும் இப்படி பந்து வீசுவது சிரமமான விஷயம் இப்படி ஐபிஎல் தொடரின் இறுதி ஓவரில் அதிகபட்ச ரன் கொடுத்த வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்.

Dinda

- Advertisement -

அசோக் திண்டா – 30 ரன்கள்- மும்பை இந்தியன்ஸ், 2017

2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அசோக் திண்டா இறுதி ஓவரில் 30 ரன்கள் கொடுத்து இருந்தார். இந்திய அணிக்காக ஒருசில போட்டிகளில் ஆடியுள்ள அவர் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hussey Brothers

டேவிட் ஹஸ்ஸி – 27 ரன்கள் -மும்பை இந்தியன்ஸ்,2013

- Advertisement -

2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் ஹஸி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி கொண்டிருந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20வது ஓவரில் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான இவர் 27 ரன்கள் கொடுத்து அந்த போட்டியில் தோல்வி அடைந்தார்.

Sukla

ராகுல் சுக்லா – 27 ரன்கள்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,2014

- Advertisement -

இவர் ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2014ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ், அணிக்கு எதிராக பந்து வீசிய கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் கொடுத்து தனது அணியை தோல்வியின் பிடியில் தள்ளினார்.

Dinda 1

அசோக் டிண்டா – 26 ரன்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2013

- Advertisement -

இந்தப் பட்டியலில் அசோக் திண்டா மீண்டும் தனது இடத்தை பிடித்துள்ளார். 2013ம் ஆண்டு பூனே வாரியர்ஸ் அணிக்காக ஆடிய பெங்களூரு அணிக்கு எதிராக 20வது ஓவரில் 26 ரன்கள் கொடுத்தார்.

Dinda 2

அசோக் டிண்டா – 26 ரன்கள் – புனே வாரியர்ஸ்,2011

இந்த பட்டியலில் மூன்றாவது முறையாக இடம்பிடித்துள்ளார் அசோக் திண்டா 2011ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ஆடியவர் அணிக்கு எதிராக 20 ஆவது ஓவரில் 26 ரன்கள் கொடுத்து இருந்தார்.

Advertisement