2021 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏலத்தில் அதிக கோடிகளுக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ipl-2020
- Advertisement -

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க போகிறது. மேலும் பிப்ரவரி மாதம் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்களது தேவையில்லாத வீரர்களை வெளியேற்றி தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக பல எதிர்பாராத வீரர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டு இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகக் காத்திருக்கும் வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Smith-1

- Advertisement -

ஸ்டீவன் ஸ்மித் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் பல ஆண்டுகளாக அந்த அணியில் பெரிதாக ரன் அடிக்காமலும் கோப்பையை வெல்லாமலும் இருந்தார். இதன் காரணமாக இந்த வருடம் யாரும் எதிர்பாராத வகையில் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ஸ்டீவன் ஸ்மித். இவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதால் மீண்டும் ராஜஸ்தான் அணியே இவரை வாங்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளும் இவரை வாங்குவதற்கு போட்டியில் களமிறங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Maxwell

கிளன் மேக்ஸ்வெல் :

- Advertisement -

பல ஆண்டுகளாக ரன் குவிக்காமல் ஐபிஎல் தொடரில் பல கோடிகளை சம்பளமாகப் பெற்று வருவதால் இந்த வருடம் பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக இவருக்கும் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து பல அணிகள் எடுக்க முனைப்பு காட்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

mujeeb-ur-rahaman

முஜிபுர் ரஹ்மான் :

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த இவர் பஞ்சாப் அணிக்காக கடந்த சில வருடங்களாக சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். இந்த வருடம் இவரை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டது பஞ்சாப் அணி. மும்பை மற்றும் சென்னை அணிகள் இவரை எடுக்க போட்டி போடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Dube 1

ஷிவம் துபே :

- Advertisement -

பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டராக களம் இறங்கியவர் சிவம் துபே. ஆனால் இவரால் பெரிதாக ரன்கள் அடிக்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் இவரை இந்த வருடம் அணியில் இருந்து வெளியேற்றி விட்டது பெங்களூர் அணி. இவருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் போட்டி போடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

finch

ஆரோன் ஃபின்ச் :

சென்ற வருடம் பெங்களூர் அணிக்காக இவரால் நன்றாக ஆட முடியாத காரணத்தால் இந்த வருடம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலை விரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Advertisement