டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த டாப் 5 கேப்டன்களின் பட்டியல்

dhoni
dhoni
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி பரபரப்பான திருப்பங்களுடன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு ஒரு அணியின் கேப்டன் தரமாக இருப்பது அவசியமாகும். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் எந்த இடத்திற்கு எந்த வீரர் பொருந்துவர் என்பதை கச்சிதமாக கணித்து தேர்வு செய்வது முதல் களத்தில் போட்டியின் சூழ்நிலைக்கேற்ப யாரை எப்படி பயன்படுத்துவது என்பது வரை அனைத்தையும் சரியாக கையாண்டு வெற்றிகளை பெற்றுக் கொடுக்க கேப்டனாக பொறுப்பேற்கும் அனைத்து வீரர்களாலும் முடியாது.

அதிலும் ஒரு நொடிப் பொழுதில் ஒரு பந்தில் வெற்றி தலைகீழாக மாறக்கூடிய டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலக கோப்பையில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தங்களை சமாளித்து வெற்றிகளை பதிவு செய்வது கேப்டனாக செயல்படும் வீரர்களுக்கு சவாலான காரியமாகும். அதில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஒரு உலகக்கோப்பையை தாண்டி மற்றுமொரு உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட முடியும். இல்லையேல் அதே உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலைமை அல்லது அதிரடியாக நீக்கப்படும் நிலைமையும் ஏற்படும்.

- Advertisement -

எனவே அணியின் இதர வீரர்களையும் கட்டுக்கோப்பாக நடத்தி தாமும் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்வதற்கு இயற்கையிலேயே தலைமை பண்புகளை கொண்ட வீரர்களால் மட்டுமே சாதிக்க முடியும். அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்களை பற்றி பார்ப்போம்:

5. குமார் சங்ககாரா 10: இலங்கையின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் இவர் 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 3 உலக கோப்பைகளில் தலைமை தாங்கிய 14 போட்டியில் 10 வெற்றிகளை 71.42% என்ற சூப்பரான சராசரியில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 4 தோல்விகளை சந்தித்தாலும் 2009 மற்றும் 2012 ஆகிய உலகக் கோப்பைகளில் இலங்கையை பைனல் வரை அழைத்துச் சென்ற பெருமையை பெற்றுள்ள அவர் டி20 உலக கோப்பைகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இலங்கை கேப்டனாகவும் அசத்தியுள்ளார்.

4. டேரன் சம்மி 11: வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் 2012, 2014, 2016 ஆகிய 3 உலகக் கோப்பைகளில் அந்த அணியின் கேப்டனாக களமிறங்கிய 18 போட்டிகளில் 11 வெற்றிகளை 67.64% என்ற சராசரியில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் கிறிஸ் கெயில், பிராவோ என சாம்பியன் வீரர்களை தலைமை தாங்கிய அவர் இந்த பட்டியலில் இருக்கும் இதர கேப்டன்களை விட 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 2 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

3. கிரேம் ஸ்மித் 11: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக சாதனை படைத்த இவர் டி20 உலக கோப்பையிலும் கடந்த 2007 – 2010 வரையிலான காலகட்டத்தில் தலைமை தாங்கிய 16 போட்டிகளில் 11 வெற்றிகளை 68.75 என்ற சராசரியில் பதிவு செய்து அதிக வெற்றிகளை பதிவு செய்த தென்னாப்பிரிக்க கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. கேன் வில்லியம்சன் 12*: நவீன கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் இவர் கடந்த 2016 முதல் இந்த உலகக் கோப்பை வரை கேப்டன்ஷிப் செய்த 16 போட்டியில் 14 வெற்றிகளை 75% என்ற அபாரமான சராசரியில் குவித்து அசத்தி வருகிறார்.

அதில் வெறும் 4 தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள அவர் கடந்த வருடம் துபாயில் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் நழுவ விட்ட கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியாவில் கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறார்.

1. எம்எஸ் தோனி 20: ஏற்கனவே சொன்னது போல் ஒருவரால் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியும். அந்த வகையில் கடந்த 2007இல் தென்னாபிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய தோனி பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரில் ஜோவிந்தர் சர்மாவை பயன்படுத்தியது உட்பட முக்கிய முடிவுகளை எடுத்து முதல் வருடத்திலேயே கோப்பை வென்று சரித்திரம் படைத்து காட்டினார்.

அதனாலயே “எம்எஸ் தோனி பார்ன் டூ லீட்” அதாவது கேப்டனாக பிறந்தவர் என்று அவரை வளர்த்த சௌரவ் கங்குலி பாராட்டிய நிலையில் அந்த வெற்றியால் 2016 வரை நடைபெற்ற அத்தனை உலகக் கோப்பைகளிலும் கேப்டனாக செயல்பட்ட அவர் 33 போட்டிகளில் 20 வெற்றிகளை 64.06% என்ற சிறப்பான சராசரியில் பதிவு செய்து டி20 உலக கோப்பையில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement