டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 5 பவுலர்களின் பட்டியல்

- Advertisement -

கிரிக்கெட்டில் எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அதில் டாஸ் மற்றும் போட்டி விளையாடும் மைதானம் ஆகியன ஒரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாகும். இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே இந்த இரண்டையும் பொருட்படுத்தாமல் எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் அபாரமாக செயல்பட்டு வெற்றியை தேடிக் கொடுக்க முடியும். ஏனெனில் பெரும்பாலான வீரர்கள் தங்கள் பிறந்து கிரிக்கெட்டை கற்ற சொந்த மண்ணில் நிலவும் கால சூழ்நிலைகளை பழகி விளையாட துவங்குவார்கள் என்பதால் அங்கு அவர்களால் எளிதாக சிறப்பாக செயல்பட முடியும்.

Jasprit Bumrah ENG vs IND

- Advertisement -

ஆனால் வெளிநாடுகளுக்கு 2 வருடத்திற்கு ஒரு முறை என்பது போல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அங்கு நிலவும் பழக்கமற்ற சூழ்நிலைகள் நிச்சயமாக சவாலை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் திறமையாலும் அனுபவத்தாலும் அந்த சூழ்நிலைகளுக்கு உடனடியாக தங்களை உட்படுத்திக் கொண்டு எதிரணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சொந்த மைதானங்களில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் அபாரமாக செயல்பட்டு தங்களது நாட்டுக்கு வெற்றியைத் தேடி கொடுப்பவர்களே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்ற போற்றுதலுக்குரியவர்கள் ஆவர்.

அதிலும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் போட்டி நாளன்று காலையில் பிட்ச் தன்மையைப் பார்த்து அதற்கேற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க உலகத்தரம் வாய்ந்த சில பவுலர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 பவுலர்களை பற்றி பார்ப்போம்:

Mcgrath

5. கிளென் மெக்ராத் 260: 90களின் இறுதியில் அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களின் தனது அபார வேகத்தால் மிரட்டி ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கைகொடுக்க கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பிறந்து வளர்ந்ததாலும் வேகத்துக்கு கைகொடுக்காத இந்தியா போன்ற நாடுகளிலும் அபாரமாக பந்துவீசி அசத்தியவர்.

- Advertisement -

மொத்தம் 563 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவரை சமீபத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நடத்தினார். ஆனால் வெளிநாடுகளில் அவர் எடுத்த 260 விக்கெட்டுகளை இன்னும் ஆண்டர்சனால் முந்த முடியவில்லை என்பதே அவரின் தரத்திற்கு சார்ந்ததாகும்.

kumble 1

4. அனில் கும்ப்ளே 269: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளும் எடுத்து இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ள ஜாம்பவான் அனில் கும்ப்ளே சுழல் பந்துவீச்சுக்கு கைகொடுக்க கூடிய இந்திய ஆடுகளங்களில் பந்தை அபாரமாக சுழற்றி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.

- Advertisement -

அதேசமயம் சுழல் கைகொடுக்காத வெளிநாடுகளில் வேகத்தை அதிகப்படுத்தும் அவர் பேட்ஸ்மேன்கள் ஆச்சரியப்படும் வகையில் சற்று அதிகப்படியான வேகத்தில் பந்தை சுழற்றி விக்கெட்டுக்களை எடுக்கும் வித்தையை கற்றிருந்தார். அந்த வகையில் 269 விக்கெட்டுகளை வெளிநாடுகளில் எடுத்துள்ள அவர் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. கோர்ட்னி வால்ஷ் 290: 80களில் அறிமுகமாகி வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு கூட்டணியில் முக்கிய பவுலராக மிரட்டிய இவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வேகத்திற்கு கை கொடுக்க கூடிய மைதானங்களில் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு 519 விக்கெட்களை எடுத்து கிளென் மெக்ராத்க்கு முன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்திருந்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்லாது வெளிநாடுகளில் 290 விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் வரலாற்றின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இன்றும் போற்றப்படும் அளவுக்கு இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

Muralitharan 2

2. முத்தையா முரளிதரன் 307: யாராலும் எட்ட முடியாத 800 விக்கெட்டுகளை எடுத்து மெகா உலக சாதனை படைத்துள்ள இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தனது கேரியரில் பெரும்பாலான விக்கெட்டுகளை சொந்த ஊரான சுழலின் தாயகமாக கருதப்படும் இலங்கை மண்ணில் எடுத்துள்ளார்.

அதனால் கிடைத்த அனுபவத்தை வெளிநாடுகளிலும் பயன்படுத்தி 307 விக்கெட்களை எடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பவுலர் என நிரூபிக்க போதுமான அளவுக்கு வரலாற்றில் அபாரமாக செயல்பட்டுள்ளார்.

warne 1

1. ஷேன் வார்னே 362: வேகம் மற்றும் பவுன்ஸ் என இயற்கையாகவே வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமளிக்கக்கூடிய ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்து வளர்ந்த ஷேன் வார்னேவுக்கு அதுவே நாளடைவில் மிகப்பெரிய பலமாக மாறியது என்றே கூறலாம். ஏனெனில் தங்களது நாட்டில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகம் கிடைக்காது என புரிந்துகொண்ட அவர் பந்தை சுழற்றுவதில் யாருமே அறிந்திராத அல்லது அதுவரை தெரிந்திராத யுக்திகளை இயற்கையாகவே கற்றுக்கொண்டு பயன்படுத்தினார்.

குறிப்பாக பந்து தரையில் பிட்ச் ஆகும்போது தாறுமாறாக திரும்புவதற்காக அதை கையிலிருந்து விடும்போதே அதற்கேற்ற வேகத்தையும் சுழலையும் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத வகையில் சேர்த்து வெளியிடுவார். இதை பற்றி தனியாக ஒரு அறிவியல் பாடமே எடுக்கலாம். அந்த அளவுக்கு சூழலில் மாயாஜாலம் நிகழ்த்தியதாலேயே சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் அவர் வெற்றிகரமான பவுலராக இருந்துள்ளார்.

சொல்லப்போனால் அவர் எடுத்துள்ள 708 விக்கெட்களில் பாதிக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அதாவது 362 விக்கெட்டுகளை வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளார் என்பதே அவரைப் போன்ற மகத்தான சுழல்பந்து வீச்சாளர் இந்த மண்ணில் பிறக்கவில்லை என்பதற்கு சான்றாகும்.

Advertisement