பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் நிறைந்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் 5 பவுலர்கள்

Steyn-1
- Advertisement -

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் ஒரு அணி வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு அந்த அணிக்காக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். அதற்காக பேட்டிங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் உட்பட எந்த எல்லையையும் தாண்ட தயங்காத பேட்ஸ்மென்கள் எப்போதுமே பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அவர்கள் கொஞ்சம் சொதப்பலாக பந்து வீசினால் உடனடியாக அதற்கு தண்டனை கொடுக்கும் வகையில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடுவார்கள்.

- Advertisement -

அப்படி அதிரடியான பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்களுக்கு மேல் கிடையாது, நோ பால் வீசினால் தண்டனையாக ப்ரீ ஹிட் என்பது போன்ற நிறைய அடிப்படை விதிமுறைகளே பவுலர்களுக்கு எதிராக இருப்பதால் ஒவ்வொரு போட்டியிலும் பவுலர்களின் நிலைமை என்பது படாத பாடாக உள்ளது. அப்படி பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு பவுலர்கள் அழுத்தத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமெனில் முதலில் ரன் எதுவும் கொடுக்காமல் பந்து வீச வேண்டும்.

அதாவது பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் டாட் பந்துகளை வீசினால் ஏற்படும் அழுத்தத்தால் அவர்கள் அவுட்டாவதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படும். ஒருவேளை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பவுண்டரிகளை எடுக்கவில்லை என்றாலும் கூட டபுள், சிங்கிள் போன்ற ரன்களை எடுத்து பவுலர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் டாட் பந்துகளை வீசுவது விக்கெட் எடுப்பதற்கு சமமான பாராட்டை பெறுவதற்கு தகுதியானதாகும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை வீசிய டாப் 5 பவுலர்களை பற்றி பார்ப்போம்:

deepak

5. தீபக் சஹர் 190: ராஜஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அசத்தியதால் கிடைத்த வாய்ப்பில் இந்தியாவிற்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் போன்ற சாதனைகளை படைத்தவர்.

- Advertisement -

பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுக்கள் எடுப்பதில் வல்லவரான அவர் கடந்த 2019 சீசனில் 17 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை 7.47 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்தார். அந்த வருடம் 190 பந்துகளில் ஒரு ரன் கூட வழங்காத அவர் இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

Malinga

4. லசித் மலிங்கா 195: வித்தியாசமான சிலிங்கா பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை யார்கர் பந்துகளால் திணறடித்த இலங்கையின் லசித் மலிங்காவை சுலபமாக எதிர்கொள்வது பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகும். அதிலும் 2019இல் சென்னைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தரும் அளவுக்கு தரமான அவர் மும்பை அணிக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2011 சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்ற அவர் 28 விக்கெட்டுகளை வெறும் 5.95 என்ற அற்புதமான கைதட்டு பாராட்டும் எக்கனாமியில் எடுத்து அசத்தினார். அந்த சீசனில் 195 டாட் பந்துகளை வீசி அவர் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

Johnson 1

3. மிட்சேல் ஜான்சன் 196: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வேகமாக ஓடி வந்து அதிவேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் கில்லாடியாவார். இவர் கடந்த 2013 சீசனில் 17 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை 7.17 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து எதிரணிக்கு தொல்லை கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெறும் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் மும்பை முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதுடன் அந்த சீசனில் 196 டாட் பந்துகளை வீசி இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. பிரசித் கிருஷ்னா 200: இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 10 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இளம் இந்திய பந்துவீச்சாளர் பிரஸித் கிருஷ்ணா 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை 8.29 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த இளம் வயதிலேயே ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் 200 டாட் பந்துகளை வீசியுள்ள அவர் 2022 சீசனிலும் ஒட்டுமொத்த வரலாற்றிலும் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார். வரும் காலங்களில் இவரின் பந்துவீச்சில் மேலும் முன்னேற்றத்தை காண்பர் என்பதால் இவரை இன்னும் தரமான பவுலராக முடியும் என்று நம்பலாம்.

Steyn

1. டேல் ஸ்டைன் 219: சச்சின் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்களை கூட 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது துல்லியம் நிறைந்த அசுர வேக பந்துகளால் திணறடித்த தென்னாப்பிரிக்க புயல் டேல் ஸ்டெயின் ஐபிஎல் தொடரிலும் 97 விக்கெட்களை அதுவும் 6.91 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.

குறிப்பாக கடந்த 2013 தொடரில் உச்சபட்சமாக 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வெறும் 5.66 என்ற அட்டகாசமான எக்கனாமியில் எடுத்த அவர் அந்த வருடத்தில் 219 டாட் பந்துகளை வீசி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக பந்துகளை வீசி பவுலராக இன்றும் சாதனை படைத்துள்ளார்.

Advertisement