பந்துவீச்சாளர்களாக இருந்து பேட்டிங்கில் பொளந்து கட்டும் 5 அதிரடி வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

கிரிக்கெட்டில் பலவிதமான திறமைகள் இருக்கின்றன. பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்ஷிப், கீப்பிங், பீல்டிங் என ஏதாவது ஒன்றில் மிகவும் நீங்கள் திறமை வாய்ந்தவராக இருந்தால் எந்த ஒரு சர்வதேச அணியிலும் இடம் பிடித்து பட்டையைக் கிளப்பலாம். ஒரு சில வீரர்கள் ஒரு திறமைக்காக நன்கு அறியப்பட்டு, அதன் பின்னர் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அசத்தி இருப்பார்கள். அப்படி பந்துவீச்சாளர்கள் துவங்கி அதன் பின்னர் அதிரடி பேட்ஸ்மேன்களாக மாறிய கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

udana

- Advertisement -

இசுரு உதானா :

இவர் இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். திடீரென 2019ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது பேட்டிங் ருத்ர தாண்டவத்தை காட்டினார். 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து 83-7 என்ற நிலையில் இருந்த தனது அணியை 180 ரன்கள் குவிக்க வைத்தார். இவருடைய டி20 ஸ்ட்ரைக் ரேட் 144.65 ஆக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி அதிரடி வீரராக மாறியவர் இவர்.

Curran

சாம் கரண் :

- Advertisement -

இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இங்கிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக தான் அந்த அணியில் அறிமுகமானார். முதலில் டெஸ்ட் போட்டி ஆடியபோது திடீரென தனது பேட்டிங் திறமையை காட்டினார். இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 272 ரன்கள் குவித்தார் அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7.2 கோடி கொடுத்தது எடுத்தது. டி20 போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 152 ஆக இருக்கிறது.

Rashid

ரஷீத் கான் :

- Advertisement -

இவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். சுழற்பந்து வீச்சுக்கு அறியப்பட்ட இவர் அவ்வப்போது அதிரடி பேட்ஸ்மேன் ஆக மாறி வருகிறார். தற்போது இவருக்கு 21 வயதாகிறது அவ்வப்போது தனது அசாத்திய திறமையும் மூலம் பல சிக்சர்களை அடிப்பதை நாம் பார்த்திருப்போம்.

david-villey

டேவிட் வில்லி :

- Advertisement -

இவரும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தற்போது இவருக்கு 30 வயதாகிறது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் இவருடைய டி20 ஸ்ட்ரைக் ரேட் 139.68 என இருக்கிறது. இவரும் பந்துவீச்சாளராக அறிமுகமாகி பேட்ஸ்மேனாக மாறியவர்.

Narine

சுனில் நரைன் :

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். ஐபிஎல் கடந்த பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 2017ம் ஆண்டு திடீரென இவர் துவக்க வீரராக களமிறக்கப்பட்டு சோதிக்க படுகிறார். அப்போது தனது பேட்டிங் திறமையை காட்டிபல அரை சதங்களை அடித்தார் இவருடைய டி20 ஸ்ட்ரைக் ரேட் 146.95 ஆக இருக்கிறது.

Advertisement