டி20 உலக கோப்பை வரலாற்றில் விளாசப்பட்டுள்ள டாப் 5 பிரம்மாண்ட சிக்ஸர்களின் பட்டியல் – யுவி எந்த இடம்னு பாருங்க

Livingstone
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே ஒரு கிரிக்கெட் போட்டி தரமாக இருக்க வேண்டுமெனில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டும் சமமாக இருக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லக்கூடிய டி20 போட்டிகளில் மட்டுமே பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி எதிரணியை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதை விட பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி 200 ரன்கள் குவிப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவார்கள்.

ROhit Sharma Matthew Wade

- Advertisement -

குறிப்பாக பவுண்டரிகளை விட அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட சிக்சர்களை பேட்ஸ்மேன்கள் எப்போது அடிப்பார்கள் என்பதே ரசிகர்களின் முதன்மை எதிர்பார்ப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக பணத்தையும் நேரத்தையும் செலவழித்து மைதானத்திற்கு நேராக சென்று போட்டியை பார்க்கும் ரசிகர்கள் வெகு தூரத்தில் அமர்ந்திருக்கும் தங்களது கைக்கு பந்து வருமளவுக்கு ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிக்சரை அடிக்க மாட்டாரா என்று காத்துக் கிடப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களை மகிழ்வித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வெகு தொலைவிற்கு சிக்சர்களை அடித்த டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. ஜூனைட் சித்திக் 109: இந்த வருட உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான முதல் சுற்றில் 153 ரன்களை துரத்திய ஐக்கிய அரபு நாடுகள் 56/9 என ஆரம்பத்திலே மொத்தமாக சறுக்கியது. அதனால் தோல்வி உறுதியானாலும் அந்த சமயத்தில் களமிறங்கிய இவர் துஷ்மந்த சமீரா வீசிய 17வது ஓவரின் ஒரு பந்தை தாறுமாறாக சுழற்றி அடித்தார்.

Junaid-Siddique

அப்போது நல்ல கனெக்சன் கிடைத்ததால் வலுவாக சிக்கிய அந்த பந்து வேகப்பந்து வீச்சாளரான அவர் கொடுத்த பவருக்கு 109 மீட்டர்கள் பயணித்து மைதானத்தின் கூரையை தாண்டி விழுந்தது. அந்த வகையில் ஒரு பந்து வீச்சாளராக அவர் இந்த பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது ஆச்சரியமாகும்.

- Advertisement -

4. மிஸ்பா-உல்-ஹக் 111: 2007 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்களை துரத்தும் போது 46/4 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக களமிறங்கி 66 ரன்கள் குவித்த இவர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

குறிப்பாக கடைசி 11 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது நேதன் ப்ராக்கென் வீசிய 19வது ஓவரில் 111 மீட்டர் மெகா சிக்சரை பறக்கவிட்ட அவர் 8 பவுண்டரிகளையும் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஆண்ட்ரே ரசல் 111: வெஸ்ட் இண்டீஸ் காட்டடி வீரர்களில் லேட்டஸ்ட் நாயகனாக கருதப்படும் இவர் பொதுவாகவே முரட்டுத்தனமாக சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அந்த வகையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய இவர் 18* (7) ரன்களை விளாசி பினிசிங் கொடுத்தார்.

குறிப்பாக மகத்தான மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 5வது ஓவரில் விளாசிய பந்து 111 மீட்டர்கள் பயணித்து அவருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பட்டியலில் 3வது இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

- Advertisement -

2. லியம் லிவிங்ஸ்டன் 112: தற்சமயத்தில் உலக அரங்கில் பெரிய சிக்சர்களை பறக்கவிடும் இங்கிலாந்து பேட்ஸ்மேனாக கருதப்படும் இவர் 2021 டி20 உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தரமான ககிசோ ரபாடா வீசிய ஒரு ஓவரில் 2 பிரம்மாண்ட சிக்சர்களை பறக்கவிட்டார்.

livingstone 1

அதில் ஒன்று 112 மீட்டர்கள் பயணித்து அதே தொடரில் அதற்கு முந்தைய போட்டியில் ரசல் அடித்த 111 மீட்டர் சிக்ஸர் சாதனையை முறியடித்தது. அத்துடன் டி20 உலக கோப்பையில் 2வது பெரிய சிக்சரை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெயரையும் அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

1. யுவராஜ் சிங் 119: டி20 உலகக் கோப்பை என்றதுமே அனைவருக்கும் 2007 டி20 உலக கோப்பையில் டர்பன் நகரில் வம்பிழுத்த அண்ட்ரூ ஃப்ளின்டாஃப்க்கு பதிலடியாக சிக்கிய ஸ்டூவர்ட் ப்ராடை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டு இந்தியாவின் யுவராஜ் சிங் படைத்த உலக சாதனை தான் நினைவுக்கு வரும்.

ஆனால் அதைவிட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதியில் உலகின் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பிரட் லீ வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் அசால்டாக 119 மீட்டர் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்ட அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ப்ரம்மாண்ட சிக்சரை அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்தார். அப்போட்டியில் 70 (30) ரன்களை விளாசிய அவர் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement