21-ஆம் நூற்றாண்டில் கரியரின் உச்சத்தில் இருந்தபோது திடீரென ஓய்வுபெற்ற டாப் 5 நட்சத்திரங்கள்

Ganguly-dhoni
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தரமான வீரர்களாக உலகின் அனைத்து இடங்களிலும் தரமான எதிரணி வீரர்களை எதிர்கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்து தங்களது அணியின் தூண்களாகவும் ரசிகர்கள் போற்றும் சூப்பர் ஸ்டார்களாகவும் மாறி நிரந்தரமான இடத்தைப் பிடிப்பார்கள். இருப்பினும் பகலானால் இரவு வரும் என்பது போல் கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே என்ற நிலைமையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களாலும் பார்மை இழந்து சிறப்பாக செயல்பட முடியாத நிலைமை ஏற்படும்.

Sachin

அதுபோன்ற சூழ்நிலைகளில் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகிலேயே ஒருசில வீரர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்குள் இழந்த தங்களது பார்மை மீட்டெடுத்து கடைசி வரை சிறப்பாக விளையாடி ஓய்வு பெறுவார்கள். ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் அணியிலிருந்து நீக்கப்படும் பெரும்பாலான வீரர்கள் நாட்டுக்காக முழு மூச்சாக விளையாடியதால் திடீரென்று மனதளவில் உடைந்து போவார்கள். அதற்காக மனம் தளராத குறிப்பிட்ட சிலர் மட்டுமே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்து தங்களது உலகத் தரத்தை நிரூபிப்பார்கள்.

- Advertisement -

உச்சத்தில் ஓய்வு:
ஆனால் பெரும்பாலான வீரர்கள் சுமாரான பார்ம் காரணமாகவும் அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் அவர்களது இடத்தில் வந்து விடுவதாலும் கடைசிவரை தேசத்துக்காக விளையாடும் போது ஓய்வு பெறாமல் ஏதோ ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓய்வு பெறுவார்கள். இருப்பினும் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது மதிப்பு மரியாதையுடன் ஓய்வு பெறுவதே மிகச் சிறந்த முடிவு என்று வல்லுநர்கள் கூறுவார்கள்.

Yuvraj

ஆனாலும் எப்படியாவது மீண்டும் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்கலாம் என்ற எண்ணதால் அதற்கு 90% வீரர்களின் மனம் சம்மதிக்காது என்ற நிலைமையில் அரிதினும் அரிதாக ஒருசில வீரர்கள் மட்டுமே உச்சத்தில் இருக்கும்போது தைரியமான முடிவை எடுத்து ஓய்வை அறிவிப்பார்கள். மேலும் சில வீரர்கள் தொடர்ச்சியாக உச்சத்தில் செயல்படும்போது ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று ரசிகர்கள் சோகமடையும் வகையில் விடை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் 21-ஆம் நூற்றாண்டில் உச்சத்தில் இருந்த போது ஓய்வு பெற்ற 5 நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஏபி டீ வில்லியர்ஸ்: கடந்த 2004இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஏபி டிவிலியர்ஸ் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து கடந்து 2015 உலகக்கோப்பையில் உச்சபட்ச பார்மை தொட்டார் என்றே கூறலாம். அதற்கு முன் சாதாரண வீரராக வலம் வந்த அவர் 2015 வாக்கில் எப்படி பந்து வீசினாலும் நாலாபுறமும் சுழன்றுடிக்கும் பேட்ஸ்மேனாக பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

abd1

சொல்லப்போனால் மைதானங்களில் நாலாபுறங்களிலும் ரன்களை குவிக்கும் வகையில் புதுப்புது ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய அவர் “மிஸ்டர் 360” என்ற பெயருடன் பேட்டிங்கில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். இருப்பினும் 2015 உலகக் கோப்பையை எவ்வளவோ முயற்சித்தும் கேப்டனாக வெல்ல முடியாததால் மனமுடைந்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டிருந்த போதிலும் 2019 உலகக் கோப்பை துவங்க 6 மாதங்கள் முன்பாக 2018இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

- Advertisement -

4. பிரேண்டேன் மெக்கல்லம்: தனது சரவெடியான பேட்டிங்கால் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து சாதனைகளைப் பெற்றுக்கொடுத்த இவர் அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்தை 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

Mccullum 1

அந்த வகையில் வரலாற்றின் மகத்தான நியூசிலாந்து வீரர் மற்றும் கேப்டனாக போற்றப்படும் இவர் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது 2016இல் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுவும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் (54 பந்துகள்) என்ற ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் (56 பந்துகள்) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையுடன் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

3. குமார் சங்ககாரா: சர்வதேச அரங்கில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த இவர் நிறைய வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து விக்கெட் கீப்பராகவும் முத்திரை பதித்தார். கேப்டனாகவும் செயல்பட்ட அவர் 2011 உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் 2014 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று இலங்கையின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அந்த நிலைமையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக்கோப்பையுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அவர் 4 தொடர்ச்சியான போட்டிகளில் சதமடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையுடன் பிரியாத மனதுடன் விடைபெற்றார். அவரின் கடைசி போட்டியில் மழை வந்த போது அந்த மகத்தான வீரரை பிரிய முடியாமல் வானமே அழுவதாக இலங்கை ரசிகர்கள் பேசியதை மறக்க முடியாது.

2. கிளன் மெக்ராத்: வேகத்துக்கு கைகொடுக்காத மைதானங்களிலும் தனது திறமையால் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் 1999, 2003, 2007 ஆகிய 3 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். சொல்லப்போனால் 71 விக்கெட்களுடன் உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் மொத்தமாக 949 விக்கெட்களை எடுத்து வரலாற்றின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார்.

Glenn-McGrath

அந்த நிலைமையில் 2007 உலகக் கோப்பையில் 26 விக்கெட்களை எடுத்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் தனது கரியரின் உச்சத்தில் இருந்தபோது அந்த தொடருடன் ஓய்வு பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

1. சௌரவ் கங்குலி: 1996இல் அறிமுகமாகி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அசத்திய சௌரவ் கங்குலி 2000இல் சூதாட்ட சர்ச்சையில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டன்ஷிப் பொறுப்பேற்று வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற தரமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த சில வருடங்களிலேயே வெற்றி நடைபோடும் அணியாக மாற்றினார். அவரது தலைமையில் உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் வெல்லும் வித்தையை இந்தியா கற்ற போது வில்லனாக வந்த பயிற்சியாளர் கிரேக் சேப்பல் உடன் ஏற்பட்ட மோதலால் கேப்டன் பதவியை இழந்த அவர் 2006இல் அணியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Ganguly 1

ஆனால் என்னை நீக்குவதற்கு நீங்கள் யார் என்ற வகையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு மாஸ் கம்பேக் கொடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதமடித்து 239 ரன்களை விளாசினார். அந்த வகையில் உச்சத்தில் இருந்த அவர் 18575 ரன்களை விளாசியிருந்த நிலையில் 2008இல் சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். அவரை கௌரவிக்கும் வகையில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கடைசி தருணங்களில் கேப்டன்ஷிப் செய்ய அழைத்ததை ரசிகர்கள் மறக்க முடியாது.

Advertisement