ஐபிஎல் 2022 : 20 போட்டிகள் தான், அதற்குள் பட்டாசாக வெடித்த 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ

Top 5 Knocks From IPL 2022 20 Games
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலானவை போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கியது. இதில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் மல்லுக்கட்டி வருகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், பெங்களூரு போன்ற அணிகள் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அதற்கு ஈடாக புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ கூட ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்துள்ள நிலையில் மும்பை மற்றும் சென்னை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் இதுவரை ஒரு வெற்றிகளைக் கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுகின்றனர்.

பட்டாசு பேட்ஸ்மேன்கள்:
பொதுவாகவே ஐபிஎல் என்றால் அதிரடியான பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பரபரப்பான த்ரில் தருணங்களும் அனல் தெறிக்க விட்டு ரசிகர்களை மகிழ்விக்கும். அதேபோல இந்த வருடம் இதுவரை 20+ போட்டிகள் மட்டுமே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதற்குள் ஒருசில பேட்ஸ்மேன்கள் பட்டாசாக அதிரடி சரவெடியாக எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து தங்கள் அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தனர். அதைப் பற்றி பார்ப்போம்:

Pat Cummins Daniel Sams MI vs KKR

1. பட் கமின்ஸ்:
இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்காக ஒரு பேட்ஸ்மேனாக மும்பைக்கு எதிரான போட்டியில் வெறும் 15 பந்துகளில் 56* ரன்களை பறக்கவிட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் காலத்திற்கும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு இன்னிங்சை ஆடினார். மும்பைக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர் வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை கடந்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த பேட்ஸ்மேன் என்ற கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

அத்துடன் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் வீசிய ஓவரில் 6, 4, 6, 6, 6, 2 (நோ பால்), 4, 6 என விஸ்வரூபமெடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர் அந்த ஓவரின் தொடக்கத்தில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி தனது அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Rahul tewatia Odean Smith

2. ராகுல் திவாடியா:
பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா கடைசி ஓவரில் களமிறங்கி பஞ்சாப்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார் என்றே கூறலாம். ஏனெனில் மிகவும் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் யாருமே எதிர்பாராத வண்ணம் அதிரடியான திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார். அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது  சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றிபெற வைத்த பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் சமன் செய்தார்.

- Advertisement -

3. ஆண்ட்ரே ரசல்:
பஞ்சாப்க்கு எதிரான ஒரு போட்டியில் வெறும் 138 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதை எட்டிப் பிடிக்க முடியாமல் திணறியது. அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி காட்டடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் 8 மெகா சிக்ஸர்களையும் வெறும் 2 பவுண்டரிகளையும் பறக்க விட்டு வெறும் 31 பந்துகளில் 70 ரன்களை விளாசி 15-வது ஓவரிலேயே த்ரில் வெற்றியுடன் போட்டியையும் முடித்தார்.

Russell 70

4. ஜோஸ் பட்லர்:
பொதுவாகவே வலுவான மும்பையை புரட்டி எடுக்கும் ஒரு வீரராக அறியப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திரம் ஜோஸ் பட்லர் இந்த வருடம் அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே விஸ்வரூபம் எடுத்து முதல் ஓவரில் இருந்தே பட்டையை கிளப்பினார்.

- Advertisement -

அந்த போட்டியில் 68 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சதம் அடித்து 100 ரன்கள் விளாசி ஐபிஎல் 2022 தொடரில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அதன் காரணமாக 194 வெற்றி இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை அசால்டாக தோற்கடித்து வெற்றி பெற்றது.

buttler 1

5. தினேஷ் கார்த்திக்:
இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தமிழக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அந்த அணி பங்கேற்ற முதல் 4 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியான ரன்களைக் விளாசி வெற்றி பெற வைத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஒரு பினிஷராக எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

இதையும் படிங்க : தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அடுத்த 2 போட்டிகளில் விளையாடமாட்டார் – வெளியான அறிவிப்பு (ஏன் தெரியுமா?)

அந்த வகையில் ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 170 ரன்களை துரத்திய பெங்களூரு 87/5 என தடுமாறிய நிலையில் களமிறங்கிய அவர் வெறும் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 44* ரன்களைக் குவித்து தனது அணிக்கு தனி ஒருவனை போல த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

Advertisement