ஐபிஎல் கிரிக்கெட்டில் முரளி விஜய் தெறிக்க விட்ட டாப் 5 சிறந்த இன்னிங்ஸ் – லிஸ்ட் இதோ

Vijay
- Advertisement -

தமிழக நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது 38 வயதில் அறிவித்துள்ளார். 2002 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2008இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய பின்பு தான் 2010 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த இன்னிங்ஸ்கள் விளையாடி நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். குறிப்பாக சவாலான வெளிநாடுகளில் அசத்திய அவர் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாளடைவில் சிறப்பாக செயல்படத் தவறியதால் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் 12 சதங்கள் 15 அரை சதங்கள் உட்பட 3982 ரன்களை குவித்து பெருமைப்படும் அளவுக்கு டெஸ்ட் கேரியரை கொண்டுள்ள அவர் ஐபிஎல் தொடரில் 106 போட்டிகளில் 2619 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக ஹெய்டன், மைக் ஹசி ஆகியோருடன் தொடக்க வீரராக இணைந்து 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை சென்னை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த அவரது ஐபிஎல் கேரியரின் சிறந்த இன்னிங்ஸ்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. பஞ்சாப் அணியில்: 2016 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 175 ரன்களை துரத்தும் போது 12 பவுண்டரி 1 சிக்சருடன் 89 (57) ரன்கள் அடித்த அவர் பஞ்சாப் வெற்றிக்கு போராடி அவுட்டானார்.

ஆனால் அவருக்கு பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்றது. இருப்பினும் சென்னை அணிக்கு வெளியே முரளி விஜய் விளையாடிய சிறந்த இன்னிங்ஸாக அது அமைந்தது.

- Advertisement -

4. முதல் அரை சதம்: ஐபிஎல் தொடரில் 2009இல் அறிமுகமான அவர் 2010 சீசனில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 162 ரன்களை துரத்தும் போது 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் முதல் அரை சதத்தை அடித்து 78 (39) ரன்கள் குவித்தார். சொந்த ஊரான சேப்பாக்கத்தில் நடைபெற்ற அப்போட்டியில் தன்னுடைய மறக்க முடியாத முதல் அரை சதத்துடன் அசத்திய அவர் இறுதியில் சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

3. பைனலில் அதிரடி: 2011 ஐபிஎல் பைனலில் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்த முரளி விஜய் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 95 (52) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மைக் ஹசியுடன் 159 ரன்கள் சாதனை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து ஆட்டநாயகன் விருது வென்று சென்னை 2வது கோப்பை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

2. பிளே ஆஃப் வெறித்தனம்: பொதுவாக நாக் அவுட் சுற்றில் மிகப்பெரிய அழுத்தம் நிலவும் என்பதால் அதிரடியாக விளையாடி சதமடிப்பது மிகவும் கடினமாகும். அந்த நிலையில் 2012 சீசனில் டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய அவர் 15 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியான சதமடித்து 113 (58) ரன்களை தெறிக்க விட்டார்.

அதனால் சென்னை 222/5 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றிய அவர் இறுதியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

1. வெறித்தன சதம்: கடந்த 2010 ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவர் தனது விஸ்வரூப பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 பவுண்டரி 11 சிக்சர்களை தெறிக்க விட்டு சதமடித்தார். மொத்தமாக 127 (56) ரன்களை விளாசிய அவர் 246/5 ரன்கள் குவித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க: வீடியோ : தனது டீமுக்காக ஒருத்தர் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா? ரசிகர்களை நெகிழவைத்த – ஹனுமா விஹாரி

அந்த இன்னிங்ஸ் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி 3வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் சென்னை முதல் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியது. அத்துடன் அந்த இன்னிங்ஸ் தான் இந்திய டெஸ்ட் அணியில் 2010 – 2014 வரையிலான காலகட்டத்தில் முரளி விஜய் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

Advertisement