ஐ.பி.எல் வரலாற்றின் 5 சிறந்த பவுலிங் ஸ்பெல். இந்த லிஸ்ட்ல நம்ம ஆளுங்களும் இருக்காங்க – லிஸ்ட் இதோ

IPL-bowlers

பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் பெரிதாக எந்த இடமும் இருக்காது .24 பந்துகளில் எத்தனை ரன்களை கட்டுப்படுத்த முடியுமா அதை தான் செய்ய வேண்டும். அப்படி இருந்தும் ஒரு சில பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்பிய 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். அந்தப் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Alzarri Joseph

அல்ஜாரி ஜோசப் – 12/6 :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய இவர் 2019 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போது பட்டையைக் கிளப்பி வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஐபிஎல் தொடரில் தற்போது வரை மிகச் சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது.

Tanvir

சொஹைல் தன்வீர் – 14/6

- Advertisement -

2008 ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

zampa 1

ஆடம் ஜாம்பா – 19/6 :

2016ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடியவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Kumble

அனில் கும்ப்ளே – 5/5 :

2009ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடியவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3.7 ஓவர்கள் மட்டுமே வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

Ishanth

இஷாந்த் ஷர்மா – 5/12 :

2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியவர் கொச்சி அணிக்கு எதிராக வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.