தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டின் டாப் 5 பெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் – லிஸ்ட் இதோ

All
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு வீரரால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தையும் செய்ய முடியும் என்றால் அந்த வீரர் ஒரு மிகப்பெரிய பேக்கேஜ்தான். தற்போது சர்வேதேச கிரிக்கெட் உலகில் இருக்கும் மிகச் சிறந்த ஐந்து ஆல்ரவுண்டர்களின் பட்டியலைப் பார்ப்போம்

Pandya-4

- Advertisement -

ஹர்திக் பாண்டியா :

இந்திய அணிக்கு 30 ஆண்டுகாலம் கழித்து கிடைத்த மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இவர். 2016ம் ஆண்டு அறிமுகமானார். தனக்கான இடத்தை இந்திய அணியில் பிடித்துக்கொண்டார். 60 ஒருநாள் போட்டிகள், 48 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

stokes

பென் ஸ்டோக்ஸ் :

- Advertisement -

தற்போது கிரிக்கெட் உலகில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான். பல போட்டிகளை தன்னந்தனியாக நின்று இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கூட கடைசி வரை நின்று பட்டையைக் கிளப்பி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 71 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Moeen

மொயின் அலி :

- Advertisement -

இவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். இடது கை பேட்டிங்கும் வலது கை ஆப்-ஸ்பின்னருமான இவர் இங்கிலாந்து அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 112 ஒருநாள் போட்டிகள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jadeja

ரவீந்திர ஜடேஜா :

- Advertisement -

இந்திய அணிக்கு தோனியின் காலத்தில் உருவாகிய ஒரு வீரர். ரோஹித் சர்மாவை போலவே இவருக்கும் தோனி பல விமர்சனங்களுக்கு இடையே பல வாய்ப்புகள் கொடுத்து காப்பாற்றி வைத்திருந்தார். தற்போது வரை இவர் 52 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Shakib 1

ஷகிப் அல் ஹசன் :

சமகாலத்தில் உருவான மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இவர். டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் வங்கதேசம் சொதப்பினாலும், இவர் தனது திறமையை காட்டிக் கொண்டே இருப்பார் . வங்கதேச அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். மொத்தம் 58 டெஸ்ட் போட்டிகள், 212 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement