
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக இந்தியா உட்பட அனைத்து ஆசிய அணிகளும் தயாராகியுள்ளன.
இந்நிலையில் இந்தப் பதிவில் ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
1. ரோஹித் சர்மா: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரோஹித் சர்மா ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர்களில் மட்டும் 28 போட்டிகளில் 28 சிக்சர்கள் அடித்துள்ளார். அதே போல டி20 வடிவத்தில் 9 போட்டிகளில் அவர் 12 சிஸ்கர்கள் அடித்துள்ளார்.
அந்த வகையில் மொத்தமாக 40 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
2. ஷாஹித் அப்ரிடி: பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஆசியக் கோப்பையில் டி20 ஃபார்மட்டில் விளையாடவில்லை. ஒருநாள் ஃபார்மெட்டில் 21 இன்னிங்சில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ள அப்ரிடி இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். அதனால் இப்பட்டியலில் ரோஹித் சர்மா எளிதில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.
3. சனாத் ஜெயசூர்யா: இலங்கையின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக போற்றப்படும் ஜெயசூர்யாவும் ஆசியக் கோப்பையில் டி20 ஃபார்மெட்டில் விளையாடியதில்லை. ஒருநாள் ஃபார்மெட்டில் 24 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 23 சிக்சர்கள் அடித்துள்ளார். அதனால் இப்போட்டியில் 3வது இடத்தில் இருக்கும் அவர் ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள அடித்த இலங்கை வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
4. விராட் கோலி: நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படும் விராட் கோலி ஆசியக் கோப்பையில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 ஃபார்மெட்டிலும் விளையாடியுள்ளார். அதில் மொத்தமாக 18 சிக்சர்கள் அடித்துள்ள விராட் கோலி இந்தப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதனால் தம்மால் அதிரடியாக சிக்சர்களையும் அடிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக விராட் கோலி செயல்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஷிகார் தவானின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் ஷர்மா – விவரம் இதோ
5. சுரேஷ் ரெய்னா: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னாவும் ஆசியக் கோப்பை ஒருநாள், டி20 ஃபார்மெட்டில் விளையாடியுள்ளார். அதில் 18 சிக்சர்கள் அடித்துள்ள அவரும் இப்பட்டியலில் 5வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். இம்முறை யார் அதிக சிக்ஸர்கள் அடிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.