ஆசிய கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Suresh Raina MS Dhoni
Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையின் 15ஆவது தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு நடப்புச் சாம்பியன் இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்று வருகின்றன. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் கடந்த 1984 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் இந்த தொடரில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தரமான வீரர்கள் தங்களது நாட்டுக்கு கோப்பையை வென்று பெருமை சேர்க்கும் வகையில் காலம் காலமாக முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்கள்.

Asia Cup Trophy

இந்த தொடர் எப்போதும் ஆசிய கண்டத்தில் நடைபெறுவதால் அந்தத் தொடர் நடைபெறும் நாட்டின் கால சூழ்நிலைகள் கிட்டதட்ட அனைத்து அணிக்கும் தெரிந்திருக்கும். அதனால் ரசிகர்கள் ஆதரவை தவிர சொந்த மண் சாதகத்தை எதிர்பார்க்க முடியாத இந்த ஆசிய கோப்பையில் அறிமுகமாக களமிறங்கும் வீரர்கள் அதாவது முதல் முறையாக விளையாடும் வீரர்கள் நிச்சயமாக அழுத்தத்தை சந்திப்பார்கள். ஏனெனில் 4 – 5 அணிகள் இணைந்து விளையாடுவதால் மினி உலகக்கோப்பைக்கு நிகரான மதிப்பையும் அழுத்தத்தையும் கொண்ட இந்த தொடரில் எதிரணியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பவுலர்கள் ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் முதல் முறையாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் ரன்கள் குவிப்பது சவாலான காரியமாகும்.

- Advertisement -

இருப்பினும் திறமையும் இளமையும் கொண்ட தனித்துவமான வீரர்கள் மட்டுமே எதிரணி பவுலர்களின் அனுபவத்தை தகர்த்து பெரிய அளவில் ரன்களை சேர்த்து வெற்றிகளையும் பெற்றுக் கொடுப்பார்கள். அந்த வகையில் ஆசிய கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

gambir

5. கெளதம் கம்பீர் 259: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் கடந்த 2007 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருந்த நிலையில் கடந்த 2008இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முதல் முறையாக விளையாடினார். அந்த தொடரில் பைனல் உட்பட 6 போட்டிகளில் விளையாடிய அவர் 3 அரை சதங்கள் உட்பட 259 ரன்களை 43.16 என்ற நல்ல சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. ஹஷ்மதுல்லா ஷாஹிதி 263: கடைசியாக கடந்த 2018இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்காக 5 போட்டிகளில் விளையாடிய இவர் அறிமுக தொடரிலேயே 3 அரை சதங்கள் உட்பட 263 ரன்களை 65.75 என்ற நல்ல சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

yousuf 2

3. முகமத் யூசுப் 295: கடந்த 2000ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மொயின் கான் தலைமையில் அசத்திய பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

- Advertisement -

அதற்கு களமிறங்கிய 4 போட்டிகளில் 1 சதம் 2 அரைசதம் உட்பட 295 ரன்களை 147.50 என்ற சராசரியில் குவித்த முக்கிய பங்காற்றிய இவர் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து தொடர்நாயகன் விருதையும் வென்று இந்த பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

2. எம்எஸ் தோனி 327: 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனாகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் அவதரித்த இவர் 2008இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முதல் முறையாக இந்தியாவின் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் விளையாடினார்.

அந்த தொடரில் பங்கேற்ற 6 போட்டிகளில் களமிறங்கிய 5 இன்னிங்சில் 1 சதம் 2 அரைசதம் உட்பட 327 ரன்களை 109.00 என்ற சூப்பரான சராசரியில் விளாசிய அவர் இறுதிப் போட்டியிலும் இலங்கையின் அஜந்தா மெண்டீசுக்கு எதிராக எஞ்சிய அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் திணறிய போது அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும் அந்த தொடரில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

raina

1. சுரேஷ் ரெய்னா 372: அதே 2008 ஆசிய கோப்பையில் முதல் முறையாக விளையாடிய சுரேஷ் ரெய்னா மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பங்கேற்ற 6 போட்டிகளில் 2 சதங்கள் 2 அரை சதங்கள் உட்பட 372 ரன்களை 74.40 நல்ல சராசரியில் குவித்தார். அதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இன்றும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.

Advertisement