ஐ.பி.எல் வரலாற்றில் அதிக டாட் பால்களை வீசிய அசத்தல் பந்துவீச்சாளர்கள் – முழு லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரில் பல நூறு பந்துவீச்சாளர்கள் விளையாடி இருக்கிறார்கள். அதில் ஒரு சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே தற்போது வரை தங்களது பெயரை வரலாற்றில் நிலை நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஐபிஎல் தொடரில் அதிக டாட் பால் வீசிய பந்துவீச்சாளர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

Harbhajan

ஹர்பஜன்சிங் :

பத்து வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பெரும்பாலும் அந்த அணிக்காக தான் சிறப்பான பந்து வீச்சினை கொடுத்துள்ளார். மொத்தம் 170 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3731 பந்துகளை வீசி அதில் 1249 டாட் பால் வீசி இருக்கிறார்.

லசித் மலிங்கா

- Advertisement -

இவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருக்கிறார். பல போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் விளையாடிய 12 வருடத்தில் 1155 டாட் பால் வீசி இருக்கிறார்.

Bhuvi

புவனேஸ்வர் குமார் :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர். மொத்தம் 117 போட்டிகளில் விளையாடிய 1124 டாட் பால் வீசி வீசியுள்ளார்.

Mishra

அமித் மிஸ்ரா :

டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர். இவர் இவர் மொத்தம் 1111 பால் வீசியுள்ளார்.