ஐபிஎல் வரலாற்றின் மிகசிறந்த பினிசெர் யார் – புள்ளிவிவரத்துடன் கூடிய டாப் 4 பினிஷெர்களின் – லிஸ்ட் இதோ

Top Finishers Of IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற 33-ஆவது லீக் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்கத் தவறியதால் 106/6 என தோல்வியின் பிடியில் அந்த அணி சிக்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ட்வயன் பிரிடோரியஸ் உடன் இணைந்து வெற்றிக்கு போராடினார்.

MS Dhoni Finisher

- Advertisement -

அதில் பிரிட்டோரியஸ் அதிரடியாக 22 (14) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட எம்எஸ் தோனி தனி ஒருவனை போல சென்னைக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

சிறந்த பினிசெர் யார்:
அந்த போட்டியில் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் மிகச்சிறந்த பினிஷர் என பெயரெடுத்த எம்எஸ் தோனி பினிஷெருக்கான வேலையை கச்சிதமாக செய்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் பினிஷிங் என்பது ஒரு தனி கலையாகும். ஏனெனில் ஏற்கனவே வெற்றி கேள்விக்குறியாகி நிற்கும் அழுத்தம் நிறைந்த கடைசி நேரங்களில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான பவுலர்கள் வீசும் கடைசி கட்ட ஓவர்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அத்துடன் பதற்றம் இல்லாமல் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை குவித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

russell 1

அதுபோன்ற தருணங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் உலகிலேயே எம்எஸ் தோனி போன்ற குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் கடைசி கட்ட ஓவர்களான 16 – 20 ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று கொடுத்த டாப் 4 தரமான பினிசெர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

4. ஆண்ட்ரே ரசல்: ரசிகர்களால் காட்டடி வீரர் என அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆண்ட்ரே ரசல் வெறும் ஓவர் நின்றாலே போட்டியின் வெற்றியை தலைகீழாக மாற்றக் கூடியவர். இவர் ஐபிஎல் தொடரில் 46 இன்னிங்ஸ்சில் 16 – 20 வரையிலான கடைசி கட்ட ஓவர்களில் விளையாடி 797 ரன்களை 24.15 என்ற சராசரியில் எடுத்தாலும் 209.73 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் விளாசி இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். இதில் 58 பவுண்டரிகளும் 71 மெகா சிக்ஸர்களும் அடங்கும்.

3. ஏபி டீ வில்லியர்ஸ்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர ஜாம்பவான் வீரர் ஏபி டிவிலியர்ஸ் உலகின் எப்பேர்பட்ட தரமான பவுலர் எந்த அளவுக்கு கடினமான பந்து வீசினாலும் அதை அப்படியே லாவகமாக மைதானத்தில் நாலா புறங்களிலும் சிதறடிக்க கூடிய திறமை பெற்றவர்.

- Advertisement -

அதன் காரணமாகவே 360 டிகிரி பேட்ஸ்மேன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றாலும் 16 – 20 ஓவர்களில் மொத்தம் 75 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 1421 ரன்களை 40.60 என்ற அபாரமான சராசரி விகிதத்தில் எடுத்து இந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த ரன்களை 232.56 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ள அவர் 106 பவுண்டரிகளையும் 112 இமாலய சிக்சர்களையும் பறக்க விட்டுள்ளார்.

pollard 1

2. கைரன் பொல்லார்ட்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த மற்றொரு மிரட்டல் பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்ட் மும்பை அணிக்காக எத்தனையோ தோற்க இருந்த போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தி அந்த அணியின் பினிஷராக விளங்கி வருகிறார். அந்த வகையில் பினிஷிங் செய்ய வேண்டிய 16 – 20 ஓவர்களில் மொத்தம் 114 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய அவர் 1685 ரன்களை 25.53 என்ற சராசரியில் 183.95 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசியுள்ளார். இதில் 110 பவுண்டரிகளையும் 126 சிக்சர்களையும் விளாசியுள்ள அவர் இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

1. எம்எஸ் தோனி: காலம் கடந்த காவிய தலைவனாய் 40 வயதை கடந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல ஸ்டைல் மாறாத நட்சத்திரமாய் ஜொலிக்கும் இந்தியாவின் ஜாம்பவான் எம்எஸ் தோனி கேப்டன், விக்கெட் கீப்பிங் போன்ற பரிணாமங்களுடன் பினிஷிங் செய்வதற்காகவே பிறந்தவர் என்று கூறலாம். அந்த வகையில் பெரும்பாலும் கடைசி கட்ட நேரங்களில் களமிறங்கும் அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 144 இன்னிங்ஸ்களில் 16 – 20 வரையிலான ஓவர்களில் பேட்டிங் செய்துள்ளார்.

Dhoni 1

அதில் 2468 ரன்களை 36.29 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ள அவர் அதை 188.54 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். இதில் 192 மின்னல் வேக பவுண்டரிகளையும் 148 இமாலய சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து புள்ளிவிவர அடிப்படையில் வரலாற்றின் மிகச்சிறந்த பினிசெர் என்ற பெயரை பெறுவதற்கு தகுதியானவராக உள்ளார்.

இதையும் படிங்க : அவரால் மட்டுமே முடியும், வேறு யாராலும் முடியாது ! தோனிக்கு தலை வணங்கிய ஜாம்பவான் கவாஸ்கர்

இது ரன்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ள பட்டியல் என்றாலும் இன்னிங்ஸ், சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்ற விகிதங்களின் அடிப்படையில் யார் மிகச்சிறந்த ஐபிஎல் பினிஷர் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Advertisement