ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணிக்காகவும் அசத்தும் வெஸ்ட் வீரர்களின் பட்டியல் – முழுவிவரம் இதோ

Bravo
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்தியாவில் கடந்த 12 வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியில் இருக்கும் 11 வீரர்களில் 7 இந்திய வீரர்கள் 4 வெளிநாட்டு வீரர்கள் தான் ஆட முடியும். இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இதில் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அதுதான் ஐபிஎல் தொடக்கதில் இருந்து தங்களது அணிகளுக்கு தற்போது வரை நட்சத்திர வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள் அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை தற்போது பார்ப்போம்.

pollard

- Advertisement -

கெரோன் பொல்லார்ட் :

2010-ம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் இவர் இக்கட்டான சூழ்நிலைகளில் திடீரென களமிறங்கி தனது அணியை பாதுகாப்பதில் வல்லவர். அவ்வப்போது ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் இறங்கி 10 பந்துகளுக்கு 30 ரன்கள் அடிக்க வேண்டுமென்றால் இவரை அந்த அணி நம்பும். அதே நேரத்தில் நான்காவது இடத்தில் இறங்கி 30 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் இவரை தான் அந்த அணி நிர்வாகம் நாடும். மேலும் பந்துவீச்சிலும் பல்லவர் வித்தியாசமான பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறச் செய்வதில் வல்லவர்.

Russell

ஆன்ட்ரே ரசல் :

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அவர்கள் பெரும்பாலும் ஆல்-ரவுண்டராக இருக்கவே விரும்புவார்கள். மற்ற நட்சத்திர வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போல அதிரடியாக ஆடுவதிலும், மீடியம் வீசுவதிலும் வல்லவர். கடந்த வருடம் நாம் பார்த்திருப்போம் 170 ஸ்டிரைக் ரேட்டில் மொத்தம் 470 ரன்கள் குவித்திருக்கிறார். இப்படித்தான் வருடாவருடம் அடித்த அணியை தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

Bravo

டுவைன் பிராவோ :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010ஆம் ஆண்டிலிருந்து ஆடி வரும் இவர் சென்னை அணியின் மிகப்பெரிய தூணாக இருக்கிறார். தோனி, சுரேஷ் ரெய்னா ஒரு பக்கம் என்றால் டிவைன் பிராவோ ஒரு பக்கம் அப்படித்தான் சென்னை அணியால் வளர்க்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் இவர் மொத்தம் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் பேட்டிங்கிலும் அவ்வப்போது அதிரடியை காட்டி விடுவார்.

இதேபோல பஞ்சாப் அணிக்காக கெயில் மற்றும் பூரான் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக செயல்பட்டு வருகின்றனர். டெல்லி அணிக்காக ஹெட்மயர், தாமஸ் மற்றும் கீமோ பால் என பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement