சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கேதார் ஜாதவை வாங்க இருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Jadhav-2
- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது.

jadhav

- Advertisement -

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சில சீசன்களாகவே தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேதர் ஜாதவை இந்த ஆண்டு வெறியேற்றப்பட்டு உள்ளார். கேதர் ஜாதவ் இதுவரை 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 1141 ரன்கள் குவித்து 22.8 ஆவரேஜ் பெற்று இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 13வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7.80 கோடி சம்பளம் பெற்றார். ஆனால் இவர் அந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 62 ரன்கள் மட்டுமே குவித்திருத்தார். இதனால் கேதர் ஜாதவை அனைவரும் விமர்சனம் செய்தனர். இதனால் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கும் கேதர் ஜாதவை 2021 மினி ஏலத்தில் எடுக்க காத்திருக்கும் 3 அணிகள் பற்றி பார்ப்போம்.

SRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஹைதராபாத் அணி இந்த ஏலத்தில் மூன்று வீரர்களை எடுக்க வேண்டும். ஆனால் வெறும் 10.75 கோடி மட்டுமே மீதம் வைத்திருக்கிறது. ஹைதராபாத் அணியில் அனுபவ வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருமில்லை. தொகையும் குறைவாக இருப்பதால் அனுபவ வீரர் என்ற கணக்கில் கேதர் ஜாதவ் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

rcb 2

ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூர் : 2017ம் ஆண்டில் ஜாதவ் பெங்களூர் அணியில் 13 போட்டிகளில் விளையாடி 267 ரன்கள் குவித்திருத்தார். எனவே பெங்களூர் அணி கேதர் ஜாதவ் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KXIP-1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : பஞ்சாப் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் நீஷம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பஞ்சாப் அணிக்கு நடுத்தர பேட்ஸ்மன்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சாப் அணி கேதர் ஜாதவை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

Advertisement