டி20 உலககோப்பை வரலாற்றில் மிகவும் மெதுவாக விளையாடிய இந்திய வீரர்களின் டாப் 3 இன்னிங்ஸ் பட்டியல்

yuvraj
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே டி20 கிரிக்கெட் என்றாலே எந்த வகையான துறையாக இருந்தாலும் சந்தேகமின்றி அதிரடியாகவும் துடிப்பாகவும் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பரிசாக கிடைக்கும். அதிலும் குறிப்பாக எதிரணிக்கு இலக்கு நிர்ணயிக்கவும் எதிரணி நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக துரத்தி பிடிக்கவும் பேட்டிங் துறை தீயாக வேலை செய்வது அவசியமாகும். இந்த வகையான கிரிக்கெட்டில் மட்டுமே 10 ரன்களை எடுத்தாலும் அதை ஓரிரு பந்துகளில் எடுத்தால் வெற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு பேட்ஸ்மேனின் கடமையாக இருக்கும் நிலையில் அதற்கு அவர்கள் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் ரன்களை குவிக்க வேண்டும். ஆனாலும் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் அனைத்து சூழ்நிலைகளிலும் அது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியாது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக ஆரம்பத்திலேயே தங்களது அணி விக்கெட்டுகளை கொத்தாக இழந்து தடுமாறினால் நிச்சயமாக எவ்வளவு தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆல் அவுட்டாவதை தவிர்ப்பதற்காக நிதானத்துடன் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

- Advertisement -

அதே போல் எதிரணியின் பந்து வீச்சு சவாலாக இருந்தாலும் அதிரடியான ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடும் நிலைமை ஏற்படும். ஆனால் அந்த சூழ்நிலையிலும் கூட நிறைய பந்துகளை எதிர்கொண்டு செட்டிலாகி விட்டால் மைதானத்தின் தன்மை மற்றும் எதிரணியின் பந்து வீச்சை கணித்து கடைசியில் அதிரடி காட்ட வேண்டியது பேட்ஸ்மேன்களின் பொறுப்பாகும். இருப்பினும் டி20 உலக கோப்பை வரலாற்றில் குறைந்தது 20 பந்துகளை எதிர்கொண்ட பின்பும் அதிரடி காட்டாமல் மெதுவாக விளையாடிய 3 இந்திய வீரர்களின் இன்னிங்ஸ்களை பற்றி பார்ப்போம்:

1. எம்எஸ் தோனி 11 (23): பொதுவாகவே விக்கெட் சரிந்தால் நங்கூரத்தை போட்டு மெதுவாக விளையாடி கடைசியில் அதிரடி காட்டும் இலக்கணத்தை கிரிக்கெட்டில் பிரபலப்படுத்திய இவர் கடந்த 2009இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டரி அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

அதற்கு காரணம் ரோகித் சர்மா 5, சுரேஷ் ரெய்னா 5, கௌதம் கம்பீர் 14 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 29/3 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற முயன்ற அவர் 47.82 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் அவுட்டாகி டி20 உலக கோப்பையில் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய இந்திய வீரர் என்ற அவப்பெயரை பெற்றார். அவருக்கு பின் அந்த போட்டியில் யுவராஜ் சிங் 67 (43) ரன்கள் எடுத்த உதவியுடன் 153 ரன்கள் குவித்த இந்தியா இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

2. ரவிச்சந்திரன் அஸ்வின் 10 (20): கடந்த 2016இல் வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 127 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா முதல் விராட் கோலி வரை அத்தனை டாப் பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சுக்கு சவாலாக அமைந்த பிட்ச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

- Advertisement -

இருப்பினும் அதிகபட்சமாக கேப்டன் எம்எஸ் தோனி 30 (30) ரன்கள் எடுத்து போராடிய நிலையில் அவருடன் லோயர் ஆடரில் இந்தியாவை காப்பாற்ற முயன்ற அஸ்வின் 20 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அப்போட்டியில் 79 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 47 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது.

3. யுவராஜ் சிங் 11 (21): 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு அபாரமாக செயல்பட்ட விராட் கோலி 77 (58) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

ஆனால் அதை பினிஷிங் செய்ய விடாமல் ஒயிட் யார்கர் வலையை விரித்த லசித் மலிங்காவிடம் திண்டாடிய 2011 உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். கடைசியில் தோனியும் 4* (7) ரன்கள் மட்டுமே எடுத்ததால் வெறும் 130/4 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா இறுதியில் பரிதாபமாக தோற்றது.

Advertisement