ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஆகியவற்றிற்கான இந்திய அணியை நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல இளம் வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருக்கின்றனர் என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த சில வீரர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த பதிவில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, இந்திய அணிக்கு தேர்வாகாத மூன்று வீரர்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Harshal

- Advertisement -

ஹர்ஷல் பட்டேல்:

கொரானா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹர்ஷல் பட்டேலுக்கு, இலங்கை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயமாக இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், அவருக்கு இந்திய அணியில் ஒரு நெட் பவுலராக கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது சற்று அதிர்ச்சி தரும் விடயாமகவே பார்க்கப்படுகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் பட்டேல் இந்த ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tewatia

ராகுல் திவேட்டியா:

- Advertisement -

கடந்த ஐபிஎல் சீசனில் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்ட திவேட்டியாவிற்கு இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் பிட்னஸ் டெஸ்டில் தோற்றுப்போனதால் 11 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை தொடரில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் பெயரை நீக்கியிருக்கிறது இந்திய தேர்வுக் குழு. மேலும் இந்திய அணியில் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர்களாக க்ருணால் பாண்டியா மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் இருக்கின்றனர். எனவே மூன்றாவது ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் தேவையில்லை என்று நினைத்து இந்த முடிவை தேர்வுக் குழு எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

shahrukh

ஷாருக்கான்:

விஜய் ஹசாரே ட்ராபியில் சிறப்பாக செயல்பட்ட ஷாருக்கானை இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய இவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் எல்லாம் சிறப்பாகவே செயல்பட்டார். மேலும் இந்திய அணியில் பிக் ஹிட்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மட்டுமே தற்போது இருப்பதால் மற்றொரு பிக் ஹிட்டரான ஷாருக்கானுக்கு இலங்கை தொடரில் வய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement