இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் சி.எஸ்.கே அணி குறிவைத்துள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

CSK-1
- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

- Advertisement -

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் அணியில் இருந்து 6 முக்கிய வீரர்களை வெளியேற்றியிருக்கிறது. கேதர் ஜாதவ், முரளிவிஜய், ஷேன் வாட்சன், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங் ஆகியோரை வெளியேற்றி இருக்கின்றனர். இதனால் தற்போது சிஎஸ்கே அணி சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் தொடக்க வீரர் இல்லாமல் தவித்து வருகிறது. எனவே இந்த மினி ஏலத்தில் இவர்களை நோக்கியே சென்னை அணி ஏலத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

finch

ஆரோன் பின்ச் : கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஆரோன் பின்ச் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்காக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆரோன் பின்ச் சிறந்த தொடக்க வீரர் என்பதாலும் அனுபவ வீரர் என்பதாலும் சென்னை அணி இவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். ஷேன் வாட்சனுக்கு பதிலாக இவரை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

- Advertisement -

sangwan

பிரதீப் சங்வான் : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் அதிரடியாக விளையாடிய இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஏனென்றால் இவர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். எனவே இவர் சென்னை அணிக்கு ஒரு ஆப்ஷனாக இருப்பார்.

saxena

ஜலாஜ் சாக்சேன : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் இன்றி தவித்து வருகிறது. இதனால் கேரளாவைச் சேர்ந்த ஜலாஜ் சாக்சேனவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் 5 போட்டிகளில் பங்குபெற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். எனவே இவரும் ஒரு ஆப்ஷனாக இருப்பார்.

Advertisement