IPL 2023 : இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 3 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நேற்று மே 29-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

CSK vs GT

- Advertisement -

சி.எஸ்.கே அணி இந்த ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தாலும் லீக் சுற்றுகளின் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடு காரணமாக சில தோல்விகளையும் சந்தித்தது. அதன்பின்னரே தோனியின் அற்புதமான கேப்டன்சியால் மீண்டும் எழுச்சி பெற்றது.

அதிலும் குறிப்பாக இந்த தொடரின் ஒரு லீக் போட்டியின் போது சி.எஸ்.கே வீரர்கள் ஏகப்பட்ட நோ பால்களை வீசியிருந்தனர். அதிலும் துஷார் தேஷ்பாண்டே ஏகப்பட்ட நோ பால்களை வீசியிருந்தார். அதனால் அதிருப்தி அடைந்த கேப்டன் தோனி கூட அந்த போட்டியின் முடிவில் : இனி நீங்கள் இதேபோன்று தொடர்ச்சியாக நோ பால்களை வீசினால் கேப்டனாக என்னை பார்க்க முடியாது என்று தங்களது அணியின் பந்துவீச்சாளர்களை எச்சரித்திருந்தார்.

Tushar Deshpande

அதன்பிறகு இந்த தொடரில் அவர் ஒரு நோ பாலை கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தோனியின் அந்த எச்சரிக்கைக்கு பிறகு சென்னை அணியின் அனைத்து பவுலர்களுமே இந்த தொடரில் அற்புதமாக பந்துவீசினர். இந்நிலையில் இந்த தொடரில் சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 3 பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்தவகையில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் துஷார் தேஷ்பாண்டே முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் மட்டும் அவர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சி.எஸ்.கே பவுலராக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : கண்ணீருடன் விடைபெற்ற ராயுடு – கடைசி போட்டியில் மாஸ் பேட்டிங், ரோஹித் சர்மாவின் மாஸ் சாதனை சமன்

அவரைத்தொடர்ந்து 20 விக்கெட்டுகளுடன் ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதோடு மூன்றாவது இடத்தில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படும் குட்டி மலிங்கா மதீஷா பதிரானா இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் பதிரானா 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் இந்த 19 விக்கெட்டுகளில் பெரும்பாலான விக்கெட்டுகள் டெத் ஓவர்களில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement