ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 10 அணிகள் – சிறப்பு பதிவு

Ind-vs-aus-1
- Advertisement -

19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நாட்களைக் கொண்ட போட்டிகளாக துவங்கப்பட்ட கிரிக்கெட் வாரக்கணக்கில் முடிவுகளை கொடுக்காமல் நடந்து கொண்டே இருந்ததால் நாளடைவில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாக வடிவு படுத்தப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான வருடங்களில் விளையாடப்பட்டது. அப்படி முதல் முறையாக கிரிக்கெட்டை பார்த்த ரசிகர்களுக்கு 5 நாட்கள் கடந்தும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் முடிவை கொடுக்காமல் டிராவில் முடிவடைந்ததால் அலுப்பு தட்டும் வகையில் அமைந்தது.

worldcup2011

- Advertisement -

 

அதனால் ரசிகர்களை கவர்வதற்காக ஒருநாளில் முடிவை காணும் வகையில் 60 ஓவர்களாக துவங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் மிகவும் புகழ்பெற்றது. அதை மையமாக வைத்து கிரிக்கெட்டின் ஜாம்பவான் தீர்மானிக்கும் உலகக்கோப்பையும் அறிமுகப்படுத்தப் பட்டதால் மேலும் பிரபலமடைந்த ஒருநாள் போட்டிகள் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் 90களில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு நம்பர் ஒன் கிரிகெட்டாக உருவெடுத்தது.

இருப்பினும் 21ஆம் நூற்றாண்டில் அனைத்து துறைகளிலும் நினைத்து பார்க்காத வளர்ச்சி ஏற்படுத்திய காலத்தின் கட்டாயம் கிரிக்கெட்டிலும் 20 ஓவர் போட்டிகளை உருவாக்கியது. அப்போது முதல் 3 – 4 மணி நேரங்களில் ஒவ்வொரு ஓவருக்கும் த்ரில்லர் விருந்து படைக்கும் டி20 கிரிக்கெட் அதுவரை நடைபெற்று வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி இன்று நம்பர் ஒன் இடத்தை தனதாக்கியுள்ளது. போதாகுறைக்கு ஐபிஎல் போன்ற தொடர்கள் சர்வதேச டி20 போட்டிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

- Advertisement -

Worldcup

மவுசு குறையாத ஒன்டே:
அதனால் பணிச்சுமைக்கும் சில வீரர்கள் தரத்தை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட் பணத்துக்காக டி20 கிரிக்கெட் என்ற வகையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு டாட்டா காட்டுகிறார்கள். அதையே காரணமாக வைத்து ஒருநாள் கிரிக்கெட்டை நிறுத்த வேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும் கூறுகிறார்கள். ஆனால் அதிரடியான டி20 – பொறுமையான டெஸ்ட் ஆகிய இரண்டுக்கும் நடுவே ஆரம்பத்தில் பொறுமையாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடினால் வெற்றி பெறலாம் என்ற தனி கலையையும் சுவாரஸ்யத்தையும் கொண்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் எப்போதும் மவுசுகுறையாமல் தான் இருக்கிறது.

மேலும் என்னதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்கள் வந்தாலும் கிரிக்கெட்டின் சாம்பியனை 50 ஓவர் போட்டிகளை மையப்படுத்திய உலக கோப்பையில் தீர்மானிக்கப்படுவதால் அது தொடர்ந்து நடைபெற ஒருநாள் கிரிக்கெட் அவசியமாகிறது. அப்படி கிரிக்கெட்டின் இன்றியமையாத உயிர்நாடியாக கருதப்படும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 10 அணிகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

Bangladesh

10. வங்கதேசம் 400: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் கடந்த 1986இல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அந்தஸ்தைப் பெற்று இதுவரை 400 போட்டிகளில் 144 வெற்றிகளை 249 தோல்விகளையும் 36.64% என்ற சராசரியில் எடுத்து வருகிறது. 2007 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது போல் எப்போதாவது மட்டும் சிறப்பாக செயல்படும் அந்த அணி இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கிறது.

9. ஜிம்பாப்வே 547: 1983 உலக கோப்பையில் இந்தியாவுக்கு டப் கொடுத்த அணியான ஜிம்பாப்வே 90களில் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை அசால்டாக ஓடவிட்டு வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

Muzarabani

ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அடுத்த தலைமுறை தரமான இளம் வீரர்கள் கிடைக்காததால் பலவீனமாக மாறிப்போன அந்த அணி இதுவரை 547 போட்டிகளில் 142 வெற்றிகளையும் 385 தோல்விகளையும் 27.28% என்ற சராசரியில் பதிவு செய்து வருகிறது.

8. தென்ஆப்பிரிக்கா 644: விடுதலை பெற்ற 1991 முதல் ஜேக் காலிஸ் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கி உலகின் டாப் அணியாக வலம் வரும் தென் ஆப்பிரிக்கா 1999 உலகக்கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் கையிலிருக்கும் வெற்றியை தவறவிடும் அணியாகவே இருந்து வருகிறது. இதுவரை 644 போட்டிகளில் 393 வெற்றிகளையும் 224 தோல்விகளையும் 63.56% என்ற நல்ல சராசரியில் அந்த அணி பதிவு செய்து வருகிறது.

England

7. இங்கிலாந்து 770: கிரிக்கெட்டை கண்டுபிடித்து உலக கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த இங்கிலாந்து ஒரு வழியாக கடந்த 2019 பைனலில் வெற்றி பெறாமலேயே உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

சமீப காலங்களில் அதிரடியாக விளையாட கூடிய அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து 1970 முதல் இதுவரை 770 போட்டிகளில் 389 வெற்றிகளையும் 342 தோல்விகளையும் 53.17% என்ற சராசரியில் குவித்து வருகிறது.

newzeland

6. நியூஸிலாந்து 782: கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்ற வகையில் சிறிய நாடான நியூசிலாந்து 1973 முதல் இப்போது வரை 782 போட்டிகளில் 361 வெற்றிகளையும் 374 தோல்விகளையும் 49.12% என்ற சராசரியில் எடுத்து வருகிறது. 2000இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அந்த அணி 2019 உலக கோப்பையில் தோற்காத போதிலும் கோப்பையை தொட முடியாமல் பரிதாபத்தை சந்தித்தது.

5. வெஸ்ட்இண்டீஸ் 849: 3 – 4 நாடுகள் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் என்றழைக்கப்படும் இந்த அணி 70, 80களில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வெறித்தனமாக விளையாடி 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த முதல் 2 உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தது.

IND vs WI T20I

ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் 21ஆம் நூற்றாண்டில் ரொம்பவே தடுமாறும் அந்த அணி வரலாற்றில் 849 போட்டிகளில் 409 வெற்றிகளையும் 400 தோல்விகளையும் 50.54% என்ற சராசரியில் எடுத்து வருகிறது.

4. இலங்கை 875: இந்தியாவின் பக்கத்து தீவு நாடான இலங்கை முத்தையா முரளிதரன், சங்ககாரா போன்ற தரமான வீரர்களால் தரமாக இருந்தபோதிலும் சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் பலவீனமாக காட்சியளிக்கிறது.

srilanka

இருப்பினும் 1975 முதல் இப்போது வரை 875 போட்டிகளில் 398 வெற்றிகளையும் 434 தோல்விகளையும் 47.84% என்ற சராசரியில் பதிவு செய்து வரும் அந்த அணி உச்சகட்டமாக 1996 உலகக் கோப்பையை வென்றது.

3. பாகிஸ்தான் 942: இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான் வரலாற்றில் தரமான வீரர்களை உருவாக்கி 1992இல் இம்ரான் கான் தலைமையில் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

Pakistan

இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறும் அந்த அணி வரலாற்றில் 942 போட்டிகளில் 495 வெற்றிகளையும் 418 தோல்விகளையும் 54.17% என்ற சராசரியில் குவித்து வருகிறது.

2. ஆஸ்திரேலியா 966: ஒருநாள் கிரிக்கெட்டின் அரசன் என்றழைக்கப்படும் அளவுக்கு 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய 5 உலக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா வரலாற்றில் 966 போட்டிகளில் 584 வெற்றிகளையும் 339 தோல்விகளையும் 63.14% என்ற சராசரியில் குவித்து வருகிறது.

worldcup

1. இந்தியா 1008: 1974இல் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தைப் பெற்ற இந்தியா ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினாலும் 1983இல் கபில்தேவ் தலைமையிலான உலக கோப்பையை வென்றது முதல் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களின் வருகையால் பிரம்மாண்ட எழுச்சி கண்டு 2000, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபியையும் 2011இல் மீண்டும் உலகக்கோப்பையையும் வென்று வெற்றிகரமான அணியாகவே விளையாடி வருகிறது.

இப்போது வரை உலகிலேயே 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா மொத்தம் 1008 போட்டிகளில் 526 வெற்றிகளையும் 432 தோல்விகளையும் 54.86% என்ற சராசரியில் குவித்து வருகிறது.

Advertisement