ஆசிய கோப்பை 2023 : அதிர்ஷ்டத்தால் தேர்வான சூரியகுமாருக்கு பதில் அந்த இளம் வீரர செலக்ட் பண்ணிருக்கலாம் – டாம் மூடி விமர்சனம்

Tom Moody
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை நிர்ணயிக்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரை அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு பயன்படுத்த உள்ளன. அந்த நிலைமையில் நீண்ட தாமதத்திற்கு பின் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதே போல இத்தொடரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக திலக் வர்மா நேரடியாக தேர்வாகியுள்ளார். அதை விட டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் போட்டிகளில் சுமாராக செயல்பட்டுள்ள சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வாகியுள்ள இந்த அணியில் வாய்ப்புக்காக காத்து கிடக்கும் சஞ்சு சாம்சன் வெறும் கண்துடைப்புக்காக பேக்-அப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டமான சூரியகுமார்:
ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் 55.71 என்ற நல்ல சராசரியை கொண்டிருக்கும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் சூரியகுமார் நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி 24 போட்டிகளில் வெறும் 19.68 என்ற மோசமான சராசரியில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டும் அதிர்ஷ்டத்தால் சூரியகுமார் யாதவ் இந்த ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் டாம் மூடி விமர்சித்துள்ளார்.

Suryakumar Yadav

எனவே எப்படியும் பேக்-அப் வீரராக மட்டுமே தேர்வாகியுள்ள அவருக்கு பதிலாக தம்மைப் பொறுத்த வரை தற்சமத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் யசஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது சஹால் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த அணியில் அதிர்ஷ்டத்தால் தேர்வான வீரர் என்றால் அது சூரியகுமார் யாதவ் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அவர் விளையாடுவதை நாம் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய அற்புதமான வீரர் என்பதை நான் அறிவேன். ஆனால் இன்னும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படவில்லை. குறிப்பாக 20 போட்டிகளுக்கு மேல் விளையாடியும் இன்னும் அவர் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக செயல்படும் வழியை கண்டறியவில்லை என்று நினைக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் என்னை பொறுத்த வரை உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்வேன். எனவே நானாக இருந்திருந்தால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரரை தேர்வு செய்திருப்பேன்”

“அல்லது அந்த இடத்தை ஒரு மணிக்கட்டு ஸ்பின்னருக்கு கொடுத்திருக்கலாம். அது யார் என்று (சஹால்) உங்களுக்கே தெரியும். டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகள் மிகவும் வித்தியாசமானது. அதில் இன்னும் வெற்றிகரமாக செயல்படுவதற்கான வழியை அவர் உடைக்கவில்லை. மேலும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படாத அவர் இந்த கடைசி நிமிடத்தில் சாதித்து விடுவார் என்று எனக்கு தோன்றவில்லை” என கூறினார்.

இதையும் படிங்க:IND vs IRE : பும்ரா மட்டுமல்ல மேலும் 2 இந்திய வீரர்களுக்கு நாளைய போட்டியில் ஓய்வு – அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் தொடர் வாய்ப்பை பெற்ற சூரியகுமார் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட டாப் முதல் மிடில் ஆர்டர் வரை பல இடங்களில் வாய்ப்பு கொடுத்தும் எதிலுமே வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே அவரது இடத்தை ஜெய்ஸ்வால் அல்லது சஹால் போன்றவர்களை தேர்வு செய்து பயன்படுத்திருக்கலாம் என்று டாம் மூடி விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement