வார்னரை அணியில் இருந்து நீக்கியது இதற்காகத்தான். அதை அவர்கிட்டயே சொல்லிட்டோம் – டாம் மூடி விளக்கம்

நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. வார்னர் ஒரு வீரராக சற்று சுமாராக தான் விளையாடியுள்ளார். நடந்து முடிந்த 6 போட்டிகளிலும் டேவிட் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 110 தான். மேலும் தலைமை தாங்குவதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை அவர் காண்பிக்கவில்லை.

Warner

அதன் காரணமாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை நீக்கிவிட்டு கேன் வில்லியமசனை புதிய கேப்டனாக நியமித்தது. கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் அணியில் இருந்தும் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி நிர்வாகம் வார்னரை நீக்கியது ஹைதராபாத் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பதற்கு ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி விளக்கம் அளித்துள்ளார்

இது பற்றி சில மணிநேரங்களுக்கு முன்பு பேசிய டாம் மூடி, வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் எங்கள் அணியின் வியூகம் எப்பொழுதுமே இரண்டு பேட்ஸ்மேன்கள், ஒரு பவுலர் மற்றும் ஒரு ஆல்ரவுண்டரை தேர்ந்தெடுப்பது தான். அப்படி பார்க்கையில் தற்போது எங்கள் அணியில் இருக்கும் 2 திறமை வாய்ந்த மற்றும் இன்றைக்கு நல்ல ஃபார்மில் இருக்கும் இரண்டு வீரர்கள் யார் என்று நீங்கள் கேட்டால் அது பேர்ஸ்டோ மற்றும் வில்லியம்சன் தான். இந்த ஒரு காரணம் கருதியே நாங்கள் டேவிட் வார்னரை இன்றைய போட்டியில் விளையாட வைக்க வில்லை என்று கூறினார்.

moody

இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பதை நாங்கள் முன்னரே அவரிடம் கூறி விட்டோம். நாங்கள் கூறிய உடன் அவர் சிறிது வருத்தப்பட்டார். எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் இந்த வருத்தம் சகஜம்தான். ஆனால் ஒரு அணியின் நலன் கருதி இப்படிப்பட்ட தைரியமான முடிவுகளை, நாம் ஒரு சில சமயம் எடுக்க வேண்டியிருக்கும். அதை தான் இன்றைக்கு நாங்கள் செய்தோம் என்று டாம் மூடி விளக்கம் அளித்துள்ளார்

- Advertisement -

warner 1

இருப்பினும் ஹைதராபாத் அணிக்காக கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் அவர். அதேபோல 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை கைப்பற்ற தனியாளாக நின்று போராடியதும் வார்னர் மட்டும்தான். இப்படிப்பட்ட ஒரு வீரரை ஒரு தொடரில் 6 போட்டிகளை மட்டும் கருத்தில் கொண்டு உட்கார வைப்பது மிகவும் தவறான செயல் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.