வாஷிங்க்டன் சுந்தருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? – பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

sundar 1
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 48 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை பெற்றிருப்பதுடன், பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுக்க கூடியவர் என்பதன் காரணமாக அவரது பங்களிப்பு எப்போதுமே சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில சீசன்களாகவே பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைஸ் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.

sundar 1

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அதிகளவில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட திரும்பியதும் துவக்கத்திலேயே சில காயத்தையும் சந்தித்தார். அதன் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் கடைசியாக சி.எஸ்.கே அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் விளையாடினார். அப்போது எல்லைப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பந்து வீச வரவில்லை.

மேலும் பேட்டிங் செய்ய வந்த போதும் அவரது காயத்தினால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடியிடம் இருந்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் :

sundar 2

வாஷிங்டன் சுந்தருக்கு எதிர்பாராதவிதமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின்போது காயம் ஏற்பட்டது. ஏற்கனவே அவருக்கு காயமடைந்த இடத்திலேயே தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்துவரும் சில போட்டிகளில் பந்துவீச வாய்ப்பே இல்லை. அதே போன்று இந்த காயம் குணமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் இதன் காரணமாக அடுத்த சில போட்டிகளை அவர் தவற விடுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி வந்த போதும் காயத்தினால் பல தொடர்களை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் மீண்டும் மீண்டும் அணியில் இடம் பெற்று வந்தாலும் அடிக்கடி காயத்தினை சந்தித்து வருவது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தொடர்ந்து சொதப்பி வரும் வீரருக்கு பதிலாக அடுத்த போட்டியில் அறிமுக வீரரை களமிறக்கவுள்ள தோனி – யார் அந்த வீரர்?

திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான இவருக்கு தற்போது மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தடுத்து இவர் எவ்வாறு போட்டிகளில் பங்கேற்க போகிறார் என்றும் உலக கோப்பை வரும் வேளையில் தொடர்ச்சியாக இவருக்கு இப்படி காயம் ஏற்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement