தொடர்ந்து சொதப்பி வரும் வீரருக்கு பதிலாக அடுத்த போட்டியில் அறிமுக வீரரை களமிறக்கவுள்ள தோனி – யார் அந்த வீரர்?

Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு அவ்வளவு குதூகலமான தொடராக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதால் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் முதல் 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

CSK vs SRH

அதனைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருப்பதனால் தனது தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுவதாக கூறி மீண்டும் கேப்டன் பதவியை ஜடேஜா தோனியிடமே ஒப்படைத்தார். அப்படி கேப்டன் மாற்றத்திற்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனியின் தலைமையில் 3-வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இனி வரவிருக்கும் ஐந்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் மும்முரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தோனியும் அணியில் உள்ள வீரர்களை சரியாக மாற்றி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணிக்கு சில பிரச்சினைகள் உள்ளது. அதனை கண்டெடுத்து தற்போது சரி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

pathirana

இந்நிலையில் சென்னை அணியில் இந்த ஆண்டு இடம் பிடித்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் பெரிய அளவில் சோபிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் அவருக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் தலைமையின் கீழ் சிறப்பு பயிற்சியும் கடந்த சில தினங்களாக வழங்கப்பட்டு வருவதால் தோனி தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மலிங்காவை போன்றே வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசும் அவர் 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் அசத்தலாக பந்து வீசி இருந்தார்.

இதையும் படிங்க : வாசனை திரவியம் விற்கும் வேலை. ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்காவில் வாழ்க்கை – ஹர்ஷல் படேலின் சோகமான பின்னணி

அதோடு அவரது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் நிச்சயம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் என்பதனால் அவருக்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுவரை 2 டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள அவர் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement