வாசனை திரவியம் விற்கும் வேலை. ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்காவில் வாழ்க்கை – ஹர்ஷல் படேலின் சோகமான பின்னணி

Harshal
- Advertisement -

பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 72 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவரை உலகத்திற்கு மிகப்பெரிய அளவில் எடுத்துக் காட்டியது கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான். கடந்த ஆண்டு 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் பரப்பிள் நிற தொப்பியை தட்டிச்சென்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது.

harshal

இந்திய அணியிலும் தனது அற்புதமான பவுலிங்கை வெளிப்படுத்திய அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 10.75 கோடிக்கு மீண்டும் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டிலிருந்து இவரது கரியர் உச்சத்திற்கு சென்ற வேளையில் தற்போது குஜராத்தை சேர்ந்த இவர் தனது ஆரம்ப கட்ட வாழ்க்கையில் என்னென்ன கஷ்டங்களை சந்தித்து உள்ளார் என்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

குஜராத்தில் பிறந்து வளர்ந்த அவர் ஒருகட்டத்தில் அமெரிக்காவிற்கு குடியேறும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு அங்கு குடி பெயர்ந்த பின்னர் வாழ்க்கையை நடத்துவதற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு பாகிஸ்தானியரின் வாசனை திரவிய கடையில் வேலை செய்ததாக கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை வேலை செய்த பின்னர் நாள் ஒன்றிற்கு 35 டாலர்கள் என்ற அளவில் சொற்ப அளவிலேயே சம்பளமாக பெற்றதாக கூறியுள்ளார்.

harshal 1

மேலும் நியூஜெர்ஸி மாகாணத்தில் வேலை செய்த அவருக்கு அமெரிக்கா சென்ற புதிதில் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட பேச தெரியாதாம். பெரும்பாலும் அவர் இருந்த பகுதிகளில் லத்தின் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இருந்ததால் ஆங்கில மொழியில் பேச முடியாமல் திணறி உள்ளார். அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்ட அவர் அந்த வாசனை திரவிய கடையில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் தனது குடும்பத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக அந்த வேலையை செய்துள்ளார். அதன் பிறகு கிரிக்கெட்டின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து மிக விரைவாக தனது கடினமான பயிற்சியினால் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றதாகவும், தொடர்ச்சியாக தனது பயிற்சியினால் சிறப்பாக விளையாடி ஐபிஎல் போட்டிகளிலும் தகுதி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தற்போதைய டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்த்தனே – ஒரு இந்தியருக்கு இடம்

கடந்த 10 ஆண்டுகளாகவே கிரிக்கெட்டில் மெல்ல மெல்ல முன்னேறி வந்த இவர் தற்போது 31-வது வயதில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மிகப்பெரிய அளவில் சம்பாதித்தும் வருகிறார். ஆனால் அவருடைய ஆரம்ப கட்டங்கள் மிகப்பெரிய கஷ்டங்களை கடந்தே வந்துள்ளது அவரது இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவருடைய சகோதரியையும் அவர் இழந்தது வருத்தத்திற்குரிய ஒன்று.

Advertisement