நீங்க வேணா பாருங்க.. 2024 ஐ.பி.எல் தொடரின் பாதியிலேயே தோனி விலகுவார் – டாம் மூடி அதிரடி கருத்து

Tom-Moody-and-Dhoni
- Advertisement -

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று துவங்கிய 17-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்டார்.

முதல் போட்டியிலேயே சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தாலும் தோனி களமிறங்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு தற்போது 42 வயதை எட்டியுள்ள தோனிக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் அவரின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு அவர் முன்கூட்டியே பேட்டிங் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோளை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணி தரப்பிலோ, தோனியின் தரப்பிலோ இதுவரை அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இடையிலேயே தோனி விலகக்கூட வாய்ப்புள்ளதாக சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டாம் மூடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது 42 வயது எட்டியுள்ள தோனி விக்கெட் கீப்பராக விளையாடி விட்டு பேட்ஸ்மேனாகவும் செயல்பட அவரது உடற்தகுதி ஒத்துழைக்காது என்பதை தோனி உணர்ந்திருக்கலாம்.

- Advertisement -

ஒருவேளை இந்த தொடரின் பாதியில் காயம், வலி அல்லது உடற்தகுதியில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர் அணியிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே தொடரின் பாதியில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காகவே ஆரம்பத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கலாம் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 349 ரன்களை நொறுக்கிய பேட்ஸ்மேன்கள்.. ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ சாதனை படைத்த சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பல ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வரும் டாம் மூடி அனுபவம் வாய்ந்தவர் என்பதனால் அவரது கருத்து சரியாக அமையும் பட்சத்தில் அது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement