349 ரன்களை நொறுக்கிய பேட்ஸ்மேன்கள்.. ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ சாதனை படைத்த சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி

CSK vs RCB 2
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கியது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்கிய இந்த வருடத்தின் முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தஃபீசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்களை சேசிங் செய்த சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, டேரில் மிச்சல் 22, சிவம் துபே 34*, ரவீந்திர ஜடேஜா 25* ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அதனால் 2008க்குப்பின் தொடர்ந்து 16வது வருடமாக சேப்பாக்கம் மைதானத்தில் 8வது போட்டியில் பெங்களூருவை தோற்கடித்து சென்னை அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. மேலும் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியிலேயே வென்ற சிஎஸ்கே கோப்பையை தக்க வைக்கும் பயணத்தையும் வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆர்சிபி அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு விராட் கோலி 21, கேப்டன் டு பிளேஸிஸ் 35, அனுஜ் ராவத் 48*, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் அடித்தனர். ஆனால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 50 ரன்கள் தொடவில்லை. அதே போல சேசிங் செய்த சென்னை அணிக்கும் ருதுராஜ் 15, ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, டேரில் மிச்சல் 22, சிவம் துபே 34*, ரவீந்திர ஜடேஜா 25* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்களே தவிர யாருமே 50 ரன்கள் தாண்டவில்லை.

- Advertisement -

அந்த வகையில் இந்தப் போட்டி முழுவதும் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 50 ரன்கள் அடிக்காமலேயே இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 349 ரன்கள் அடித்தன. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் கூட 50 ரன்கள் அடிக்காமலேயே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டி என்ற தனித்துவமான சாதனையை 2024 சிஎஸ்கே – ஆர்சிபி முதல் லீக் போட்டி படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. சென்னை – பெங்களூரு : 349, சென்னை, 2024*
2. குஜராத் – புனே : 343, ராஜ்கோட், 2017
3. சென்னை – கொல்கத்தா : 337, அபுதாபி, 2021

இதையும் படிங்க: அவரோட இடத்தை நிரப்ப சரியான பிளேயர்.. கம்மியான சம்பளத்துக்கு சிஎஸ்கே எப்படி வாங்குனாங்க? கும்ப்ளே வியப்பு

இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்தப் போட்டியில் வரும் மார்ச் 26ஆம் தேதி முன்னாள் சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது. அதே போல முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள பெங்களூரு அடுத்த போட்டியில் பஞ்சாப்பை மார்ச் 25ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement