அவரோட இடத்தை நிரப்ப சரியான பிளேயர்.. கம்மியான சம்பளத்துக்கு சிஎஸ்கே எப்படி வாங்குனாங்க? கும்ப்ளே வியப்பு

Anil Kumble
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் ஓப்பனிங் போட்டியில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே தோற்கடித்தது. மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 173/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தஃபீஸூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பின் 174 ரன்களை சேசிங் செய்த சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா 37, சிவம் துபே 34*, ரகானே 27, ஜடேஜா 25* ரன்கள் எடுத்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவிய துவக்க வீரர் கான்வே இம்முறை காயமடைந்ததால் விளையாடவில்லை.

- Advertisement -

கும்ப்ளே வியப்பு:
ஆனால் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரச்சின் ரவீந்தரா புதிய கேப்டன் ருதுராஜுடன் ஓப்பனிங்கில் துவக்க வீரராக களமிறங்கி 3 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 37 (15) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அத்துடன் பவுண்டரி எல்லையில் விராட் கோலி மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோர் கொடுத்த கேட்ச்களையும் சிறப்பாக பிடித்த அவர் அறிமுகப் போட்டியிலேயே அசத்தினர் என்று சொல்லலாம்.

கடந்த 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சச்சினின் உலக சாதனையை உடைத்த அவர் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நியூசிலாந்துக்காக அசத்தி வருகிறார். அதனால் 1.80 கோடிக்கு ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட அவர் தற்போது சென்னை அணிக்காகவும் அசத்தத் துவங்கியுள்ளார். இந்நிலையில் கான்வே இடத்தை நிரப்புவதற்கு ரச்சின் ரவீந்திரா தரமான வீரர் என்று அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அவரை 1.80 கோடி என்ற குறைந்த தொகைக்கு சென்னை வாங்கியதை நம்ப முடியவில்லை என்று வியப்பை வெளிப்படுத்தும் கும்பளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையில் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங் துறையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அதனால் சிஎஸ்கே அணிக்காக அவர் மிகவும் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாட நியூசிலாந்து வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள்”

இதையும் படிங்க: அந்த மைதானத்தில் அதுவே கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம்.. ஓய்வு பற்றி டிகே மறைமுக அறிவிப்பு

“தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான அறிமுகப் போட்டியை பெற்றுள்ளார். டாப் ஆர்டரில் டேவோன் கான்வே இடத்தில் அசத்துவது எளிதல்ல. இருப்பினும் அந்த இடத்தில் ஸ்பின்னர்களுக்கு மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் தன்னுடைய ஷாட்டுகளை அடித்தார். சேப்பாக்கத்தில் ஒரு பேட்ஸ்மேனாக அப்படி விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

Advertisement