கோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரிட்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை

Rohith
- Advertisement -

இந்திய அணியில் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சி பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடி ரன்களை குறிப்பதுடன் அதற்கு பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறார். விராட் கோலி இதுவரை ஐசிசி கோப்பையை கைப்பற்றாதது மட்டுமே அவரிடம் ஒரு குறையாக இருந்து வருகிறது.

Kohli-2

- Advertisement -

இந்நிலையில் மூன்று விதமான அணிகளுக்கும் அவரே கேப்டன்சி செய்துகொண்டு பேட்டிங் செய்து வருவதால் அவர் மீது உள்ள பணிச் சுமை அதிகமாகும் என்றும் அதனால் ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து அவர் கேப்டன்சி துறக்க வேண்டும். அதாவது டி20 அணியில் இருந்து அவர் கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்றும் ரோஹித்தை கேப்டன் ஆக்கலாம் என்று பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிவருகின்றனர்.

அதற்கு முதலில் கோலி ரோகித்திடம் கேப்டன் பொறுப்பை வழங்க முன்வர வேண்டும் ஆனால் இதுநாள் வரை கோலி இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் மாற்றி எடுக்கவில்லை. அவரே தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவரது கேப்டன்சியை அவர் விரைவில் ரோஹித்திடம் வழங்க முன்வரவில்லை என்றால் அது கோலியின் கேரியருக்கு பாதகமாக அமையும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விராத் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய டாம் மூடி கூறுகையில் : கோலி நிச்சயம் அவரது கேப்டன்சியை பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் இந்த முடிவை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் இப்படி வலியுறுத்துவதற்கு காரணம் கோலி நீண்ட காலம் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் ஏனெனில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நாம் அறிந்ததே.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் செயல்பாட்டை பார்ப்பதற்கு அருமையாக இருந்தாலும் மூன்று விதமான போட்டிகளையும் முன்னின்று வழி நடத்தும் போது அது அவருக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் கேரியரில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஓய்வுபெற வேண்டிய அவசியம் உண்டாகும்.

Kohli-3

அதிலிருந்து தப்பிக்கவும் அவர் தொடர்ந்து சிறப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடவும் அவரது கேப்டன்சியை அவர் ரோகித் இடம் விட்டு கொடுக்க வேண்டும் என்று டாம் மூடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement