IND vs NZ : எல்லாமே அவங்களுக்கு சாதகமா போச்சி. நாங்க என்ன பண்றது? – தோல்வி குறித்து டாம் லேதம் வருத்தம்

Tom-Latham
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

Shubman Gill Ishan Kishan

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்திய அணி சார்பாக முகமது ஷமி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று ஹார்டிக் பாண்டியா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன் பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND-vs-NZ

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா அரை சதம் அடித்து ஆட்டமிழந்த வேளையில் சுட்மன் கில் 40 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்து குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் எங்களது டாப் ஆர்டர் பேட்டிங் நன்றாக இல்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான ஏரியாவில் பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இன்றைய போட்டியில் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் எந்த ஒரு விடயமும் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. அதே வேளையில் இந்திய அணிக்கு நினைத்தது அனைத்தும் நடைபெற்றது.

இதையும் படிங்க : IND vs NZ : கடைசியா நாங்க விளையாடுன 5 மேட்ச்யையும் ஜெயிக்க காரணமே இவங்கதான் – ரோஹித் சர்மா பெருமிதம்

இந்த மைதானத்தில் சில பந்துகள் தாழ்வாகவும், சில பந்துகள் சற்று ஸ்விங்காகி, பவுன்ஸ் ஆகியும் வந்தன. இந்த போட்டியில் சரியான பாட்னர்ஷிப்பை எங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழங்கவில்லை. அதேபோன்று பின்வரிசையில் சற்று ரன்களை குவிக்க முயற்சித்தாலும் இன்றைய நாள் எங்களுடைய நாளாக இல்லை. இறுதியில் இன்றைய போட்டியில் தோற்றது எங்களுக்கு மிகவும் வருத்தம் தான் என டாம் லேதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement