IND vs NZ : கடைசியா நாங்க விளையாடுன 5 மேட்ச்யையும் ஜெயிக்க காரணமே இவங்கதான் – ரோஹித் சர்மா பெருமிதம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND-vs-NZ

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற முக்கியமான அந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND-vs-NZ

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : கடைசியாக நாங்கள் விளையாடிய ஐந்து போட்டிகளிலுமே வெற்றிபெற இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம். நாங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்த்தோமோ அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த 5 போட்டிகளிலும் அவர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்கள். இந்திய பவுலர்களிடம் தற்போது சிறப்பான திறன் தென்படுகிறது. அதனை அவர்கள் வெளிப்படுத்துவதற்காக நிறையவே உழைக்கின்றனர். இந்த போட்டியில் 250 ரன்கள் வரை நியூசிலாந்து குவித்திருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : IND vs NZ : இந்தியாவில் இப்படி ஒரு மைதானமா? அசந்து போன ரோஹித் சர்மா – அப்படி என்ன நடந்தது?

அதேபோன்று முதல் போட்டியில் நாங்கள் முதலாவதாக பேட்டிங் செய்து விட்டதால் இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்து சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ரோகித் சர்மா பெருமிதத்தோடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement