IND vs NZ : இந்தியாவில் இப்படி ஒரு மைதானமா? அசந்து போன ரோஹித் சர்மா – அப்படி என்ன நடந்தது?

IND-vs-NZ
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

Shubman Gill Ishan Kishan

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 108 ரன்கள் சுருட்டியது.

பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Mohammed Shami

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த ராய்ப்பூர் மைதானம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் வழக்கமாக ஆசியாவிற்கு வெளியில் தான் இது போன்ற நல்ல சீம் உடைய ஆடுகளங்கள் இருக்கும்.

- Advertisement -

ஆனால் இந்த ஆடுகளத்தில் நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் ஆகியவை சிறப்பாக இருக்கிறது என்று இந்த மைதானம் குறித்து பாராட்டி பேசியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் யாதெனில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த ராய்ப்பூர் மைதானத்தில் தற்போது தான் முதல் சர்வதேச போட்டியாக இந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நியூசிலாந்து அணியை மோசமான சாதனைக்கு தள்ளிய இந்திய அணி – இப்படியா பண்ணுவீங்க?

வழக்கமாக இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் இருந்து வரும் வேளையில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தை ரோகித் சர்மாவும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement