நியூசிலாந்து அணியை மோசமான சாதனைக்கு தள்ளிய இந்திய அணி – இப்படியா பண்ணுவீங்க?

IND-vs-NZ
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Shubman Gill Ishan Kishan

அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பந்துவீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக நியூசிலாந்து அணியை துவக்கத்திலிருந்து கட்டுக்குள் வைத்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்க 34.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 108 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohammed Shami

இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளது. அதன்படி இன்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஒரு விக்கட்டை இழந்த நியூசிலாந்து அணி அதன் பின்னர் அடுத்தடுத்து 10.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 15 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்த 10 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நியூசிலாந்து அணி குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதையும் படிங்க : IND vs NZ : இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதும் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி

அதேபோன்று 2005-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி இந்திய அணிக்கு எதிராக 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அதேபோன்று 1997-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி 29 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இப்படி இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் (15-5) ஐந்து விக்கெட்டுகளை இழந்த மோசமான சாதனையை தற்போது நியூசிலாந்து அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement