IND vs NZ : இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதும் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

இவ்வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதன்படி இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணியானது மிகச்சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து அணியை 108 ரண்களுக்கு சுருட்டியது.

Siraj 2

பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதனை தொடர்ந்து நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் இருக்கின்றன.

இதையும் படிங்க : வீடியோ : இவர் டெஸ்ட் பிளேயர் இல்ல, அடுத்தடுத்த சம்பவம் செய்த ஸ்டீவ் ஸ்மித் – பிக்பேஷ் வரலாற்றில் புதிய சாதனை

இந்த இந்தியா நியூசிலாந்து போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இருந்த வேளையில் இந்த இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு பின்னர் இந்தியா ஒருபடி முன்னேறி மூன்றாவது இடத்திற்கும், நியூசிலாந்து ஒருபடி சரிந்து இரண்டாவது இடத்திற்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement