ஏபிடியை அவுட் செய்வது எளிது, ஆனால் ஜாம்பவானாக வருவார்னு 2008லேயே கணித்தேன் – முன்னாள் பாக் வீரர்

Abd
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றதால் வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்கவில்லை. கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்ட போது அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 2010 வரை விளையாடினார். ஆரம்ப காலங்களில் அடையாளம் தெரியாமல் சாதாரணவராக இருந்த அவரின் அபாரமான திறமை 2011இல் பெங்களூரு அணிக்காகவும் சர்வதேச போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய போது வெளிவந்தது. உலகின் எந்த தரமான பவுலர் எவ்வளவு கடினமாக பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்ஸர் அடுத்து காட்டிய அவர் ரசிகர்களை வாய்மேல் கை வைக்க வைத்தார்.

ABD

அதைவிட பந்து வீச்சாளர்களும் ரசிகர்களும் எதிர்பாராத வகையில் மடக்கி சிக்சர் அடிப்பது, படுத்துக்கொண்டே சிக்சர் அடிப்பது என்பது போன்ற பல யுக்திகளை முதல் முறையாக அறிமுகப்படுத்திய அவர் சிக்சர் மழை பொழிந்து விதவிதமான புதுப்புது ஷாட்களை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்து வந்தார். அதேபோல் சூப்பர்மேன் போல கேட்ச்களை தாவி பிடிப்பது என பீல்டிங்கிலும் புதுமையை கொண்டுவந்த அவரால் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது என்பது போல் அற்புதமாக செயல்பட்டார்.

- Advertisement -

அவுட் செய்வது எளிது:
இந்த நிலைமையில் ஆரம்ப காலங்களில் ஏபி டிவிலியர்ஸ் விளையாடியபோது பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உச்சத்தில் இருந்ததால் பெரும்பாலான தருணங்களில் டீ வில்லியர்சை எளிதாக அவுட் செய்தார். இது பற்றி தனது டுவிட்டரில் சமீபத்தில் நினைவுகூர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் சோயப் அக்தரை எதிர்கொள்வது இப்போதும் கூட தமக்கு பயத்தை அளிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஆரம்ப காலங்களில் அவரை அவுட் செய்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவிக்கும் சோயப் அக்தர் உண்மையாகவே ஏபி டிவிலியர்ஸ் உலகின் மகத்தான பேட்ஸ்மேன் என்று பாராட்டியுள்ளார். மேலும் கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் கொல்கத்தாவுக்கு விளையாடிய சோயப் அக்தர் டெல்லிக்காக விளையாடிய ஏபி டிவிலியர்ஸ் திறமையை பார்த்த அவர் வருங்காலத்தில் பெரிய ஜாம்பவனாக உருவெடுப்பார் என்று அப்போதே கணித்ததாக தெரிவிக்கிறார்.

- Advertisement -

2008லயே கணிப்பு:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை முதல் முறையாக 2008 ஐபிஎல் தொடரில் பார்த்தேன். ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்த நான் “நீங்கள் தரமான வீரராக இருப்பதால் வருங்காலத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராக இருங்கள்” என்று தெரிவித்தேன். அவரிடம் நீங்கள் மிகச்சிறந்த வீரர் என்று அப்போதே தெரிவித்தேன். நல்ல வேளையாக அவரை எதிர்கொண்ட போட்டிகளில் அதிர்ஷ்டவசமாக அவுட் செய்த நான் அவரை அவுட் செய்வது எளிது என்று நினைத்தேன்”

“மேலும் ஐபிஎல் தொடரில் புல் ஷாட் அடிக்க முயன்ற அவருக்கு எனது பந்து வேகமாக இருந்ததால் நாம் சற்று தாமதமாக அடிக்கிறோம் என்று அவர் உணர்ந்தார். அதனால்தான் என்னை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்று சமீபத்தில் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இருப்பினும் அவரைப்போன்ற தரமானவர் சீக்கிரத்திலேயே ஓய்வு பெற்றது எனக்கு சோகத்தையும் கோபத்தையும் கொடுத்தது” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது ஆரம்ப காலத்தில் தன்னுடைய வேகமான பந்துகளில் புல் ஷாட் அடிப்பதற்கு தடுமாறிய ஏபி டிவிலியர்ஸ் அடுத்த சில வருடங்களில் மும்மடங்கு முன்னேறி மகத்தான பேட்ஸ்மேனாக உருவெடுத்ததாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் சீக்கிரத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற்றது தமக்கு சோகத்தை கொடுத்ததாகவும் சோயப் அக்தர் தெரிவிக்கிறார்.

ABD

அவர் கூறுவது போல 2015 வாக்கில் கேரியரின் உச்சத்தைத் தொட்ட ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் உட்பட எங்கு சென்றாலும் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதையும் தாண்டி பிரம்மாண்ட வளர்ச்சி கண்டார். ஆனால் 2015 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட அவர் அதை வெல்ல முடியாததால் மனமுடைந்துடன் ஒருசில காயங்களும் விளையாடியதால் 2019 உலக கோப்பை துவங்க ஒரு வருடம் முன்பாக 2018இல் 34 வயதிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகி அடுத்த சில மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க : மீண்டும் உலகசாதனை படைத்த பாபர் அசாம் – ஆனால் ரூல்ஸ்சை மீறியதால் களத்திலேயே தண்டனை வழங்கிய அம்பயர்

இருப்பினும் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்டதால் 2020இல் தென் ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததால் அதில் பின்வாங்கிய அவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement